நந்தினி..! நீ எனக்கு உடனே வேணும்..! மறுத்த காதலி! கொலைவெறியில் காதலன் செய்த பகீர் செயல்! கோவை சம்பவம்!

கோவையில் திருமணம் செய்து கொள்ள மறுத்த காதலியை, அவரது காதலர் சாணி பவுடரை கரைத்து வாயில் ஊற்றி கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


கோவையில் கீரணத்தம் என்ற பகுதி அமைந்துள்ளது. இந்த பகுதியில் கல்லுக்குழி என்ற கிராமம் அமைந்துள்ளது. இங்கு முருகன் மற்றும் ராமாத்தாள் என்ற தம்பதியினர் வசித்து வருகின்றனர் . இவர்கள் இருவருக்கும் திருமணமாகி 21 வயதில் நந்தினி என்ற மகள் உள்ளார்.

நந்தினி கோயம்புத்தூரில் உள்ள அரசு கலைக்கல்லூரியில் பிஎஸ்சி கணிதம் இறுதியாண்டு பயின்று வந்துள்ளார். கோயம்புத்தூரில் உள்ள சங்கரனை என்ன ஊரை சேர்ந்தவர் தினேஷ். இவரும் நந்தினியும் ஒரே பள்ளியில் ஒன்றாக இணைந்து படித்துள்ளனர்.

சிறு வயதிலிருந்தே இவர்களுக்கிடையே இருந்த நட்பு பின்னர் காதலாக மாறியுள்ளது. இவர்களது காதலை பற்றி நந்தினி அவரது வீட்டு பெற்றோரிடம் கூறி இருக்கின்றார். பின்னர் இருவரும் கலந்துபேசி நந்தினியின் படிப்பு முடிந்த பின்பு திருமணம் வைத்துக் கொள்ளலாம் என்று முடிவு செய்துள்ளனர்.

இதற்கிடையில் தினேஷ் நந்தினியை தொடர்ச்சியாக உடனடியாக தன்னை திருமணம் செய்து கொள்ள வேண்டும் என வற்புறுத்தியிருக்கிறார். பின்னர் நந்தினி கல்லூரிப் படிப்பு முடிந்தவுடன் நிச்சயம் நாம் இருவரும் திருமணம் செய்துகொள்ளலாம் என கூறி வந்திருக்கிறார். இருப்பினும் தொடர்ச்சியாக தினேஷ் நந்தினியை டார்ச்சர் செய்து வந்தமையால் நந்தினி அவரது காதலனிடம் சரியாக பேசுவதை நிறுத்திவிட்டார்.

இதனால் ஆத்திரம் அடைந்த தினேஷ் நேற்றையதினம் நந்தினியின் வீட்டில் யாருமில்லாத நேரமாகப் பார்த்து அத்துமீறி உள்ளே நுழைந்திருக்கிறார். பின்னர் நந்தினியை தன்னை உடனடியாக திருமணம் செய்து கொள்ளுமாறு வற்புறுத்தி இருக்கிறார். அதற்கு ஒப்புக் கொள்ளாத நந்தினியை அருகில் இருந்த பொருட்களை கொண்டு பலமாக தாக்கி இருக்கிறார்.

அப்படியும் அவருடைய ஆத்திரம் அடங்காமல் தான் கொண்டுவந்த சாணி பவுடரை கரைத்து நந்தினியின் வாயில் ஊற்றி இருக்கிறார். இதனை குடித்த நந்தினி மயங்கி கீழே விழுந்தார். இதனைப் பார்த்த தினேஷ் உடனடியாக அந்த இடத்தை விட்டு தப்பி ஓடிவிட்டார்.

வெளியே சென்றிருந்த நந்தினியின் பெற்றோர் வீடு திரும்பி இருக்கின்றனர் . வீடு திரும்பிய அவர்களுக்கு மிகப்பெரிய அதிர்ச்சி காத்துக்கொண்டிருந்தது. மகள் பேச்சு மூச்சில்லாமல் நினைவில்லாமல் கிடப்பதை பார்த்தவர்கள் கொதித்தெழுந்தனர். பின்னர் நந்தினியை அருகிலிருந்த மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர்.

மருத்துவமனையில் நந்தினிக்கு தீவிர சிகிச்சை வழங்கப்பட்டது. இருப்பினும் நந்தினி சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார் . இதனை அறிந்த அவரது பெற்றோர் கண்ணீர் விட்டு கதறி அழுதனர். பிரேத பரிசோதனை முடிந்த பின்பு நந்தினியின் உடலை அவரது பெற்றோர் வாங்க மறுத்துவிட்டனர்.

தங்களின் மகளை கொலை செய்த தினேஷை கைது செய்யாமல் நந்தினியின் உடலை வாங்க மாட்டோம் என அவரது பெற்றோர் மற்றும் உறவினர்கள் அனைவரும் மருத்துவமனை வாசலில் போராட்டம் நடத்தியிருக்கின்றனர். தகவல் அறிந்து வந்த போலீசார் அவர்களை சமாதானப்படுத்தி நிச்சயம் தினேசை கைது செய்வோம் என்று உறுதியளித்துள்ளனர் 

இதற்கிடையில் தினேஷ் தானும் சாணி பவுடரை கரைத்து குடித்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார். 

போலீசார் இந்த கொலை வழக்கை பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதி மக்களிடையே பெரும் பரபரப்பையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.