இளம் பெண்ணை கொலை செய்து சடலத்துடன் செக்ஸ்! புதுச்சேரியில் சிக்கிய சைக்கோ சிறுவன்!

புதுச்சேரியில் திருமணம் நிச்சயிக்கப்பட்ட பெண் கடந்த வாரம் கொலை செய்யப்பட்ட வழக்கில் பரபரப்பு திருப்பம் ஏற்பட்டுள்ளது.


   புதுச்சேரி குயவர் பாளையத்தை சேர்ந்த இளம் பெண்ணுக்கும் அவர் காதலித்த இளைஞருக்கும் வரும் ஜனவரி 27ந் தேதி திருமணம் நடைபெறுவதாக நிச்சயிக்கப்பட்டு இருந்தது. இந்த நிலையில் கடந்த 18ந் தேதி திருமணமாக உள்ள தனது மகளுக்கு வீடு பார்க்க அவரது தாயார் வெளியே சென்றுவிட்டார். மாலையில் வீடு திரும்பிய அவர் பார்த்த காட்சிகள் அதிர வைப்பதாக இருந்தது.

   காலையில் சிரித்த முகத்துடன் தாயை வழி அனுப்பி வைத்த அந்த பெண் முகம் சிதைக்கப்பட்டு கொடூரமான முறையில் தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டு கிடந்தார். பிரேதப்பரிசோதனை அறிக்கையில் இளம் பெண் பலாத்காரம் செய்யப்பட்டது தெரியவந்தது. இதனை அடுத்து எதிர் வீட்டில் வசித்து வந்த இளைஞரை பிடித்து போலீசார் விசாரித்து வந்தனர். அந்த இளைஞர் தான் கஞ்சா போதையில் இளம் பெண்ணை பலாத்காரம் செய்து கொலை செய்ததாக போலீசார் கூறினர்.

   மேலும் அந்த இளைஞர் கொலை செய்யப்பட்ட பெண்ணை அக்கா என்று தான் அழைப்பார் எனவும், அக்காவை தம்பியே பலாத்காரம் செய்து கொலை செய்துவிட்டதாகவும் தகவல் பரவியது. ஆனால் மருத்துவ பரிசோதனையில் கொலை செய்யப்பட்ட பெண்ணின் உடலில் இருந்த விந்தணுவும், விசாரணைக்கு உள்ளாக்கப்பட்ட இளைஞரின் விந்தணுவும் வேறு வேறாக  இருந்தது. இதனை அடுத்து அந்த இளைஞரை போலீசார் விடுவித்தனர்.

   தொடர்ந்து கொலை செய்யப்பட்ட பெண்ணின் சித்தி மகனை பிடித்து விசாரித்த போதும் துப்பு கிடைக்கவில்லை. இதனை தொடர்ந்து பெண்ணின் கீழ் வீட்டில் வசித்த இளைஞரையும் போலீசார் விசாரணை வளையத்திற்குள் கொண்டு வந்தனர். ஆனால் அவர்களுக்கும் கொலைக்கும் எந்த தொடர்பும் இல்லை என்பது தான் இறுதியான முடிவாக இருந்தது. இந்த நிலையில் கொலை செய்யப்பட்ட பெண் வசித்த வீட்டுக்கு அருகே உள்ள சி.சி.டி.வி கேமராவை போலீசார் ஆய்வு செய்தனர்.

   அப்போது கொலை நடைபெற்ற அன்று சிறுவன் ஒருவன் அந்த பகுதியில் பரபரப்பாக நடந்து சென்ற காட்சிகள் சி.சி.டி.வி கேமராவில் பதிவாகியிருந்தது. சந்தேகத்தின் அடிப்படையில் போலீசார் அவனை தேடிய போது, அவன் தலைமறைவாக இருந்தார். இதனை தொடர்ந்து அவனை பிடிக்க போலீசார் நடவடிக்கை மேற்கொண்டிருந்தனர். இந்த நிலையில் தேடப்பட்ட சிறுவனின் தாயார் போலீசாரை தொடர்பு கொண்டு அவனை சரணடையச் செய்தார்.

   விசாரணையில் தான் புறா வளர்த்து வருவதாகவும், ஒரு புறா இளம் பெண்ணி ன் வீட்டின் மொட்டை மாடிக்கு சென்றுவிட்டதாகவும் அதனை பிடிக்க சென்ற போது அந்த பெண் தன்னிடம் சண்டை போட்டதாகவும் அந்த சிறுவன் கூறியுள்ளான். இதனால் ஆத்திரத்தில் அருகில் இருந்த செங்கலை எடுத்து அடித்த போது அந்த பெண் கீழே விழுந்ததாகவும் அப்போதும் ஆத்திரம் தீராமல் முகத்தை சிதைத்து கொலை செய்ததாகவும் அந்த சிறுவன் கூறியுள்ளான்.

   மேலும் அந்த பெண் உயிரிழந்த பிறகு அவர் மீது ஆசை ஏற்பட்டதாகவும் இதன் பிறகு இறந்த பெண்ணின் சடலத்துடன் செக்ஸ் வைத்துவிட்டு தப்பிச் சென்றதாகவும் அந்த சிறுவன் கூறியுள்ளான். இதனை அடுத்து அவனை கைது செய்த போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறுவர் சீர்திருத்த பள்ளியில் சேர்த்துள்ளனர். இதனிடையே மருத்துவ பரிசோதனையிலும் இளம் பெண் உயிரிழந்த பிறகே சிறுவன் உடலுறவு கொண்டது உறுதியாகியுள்ளது.

   கொடூர எண்ணத்துடன் கொலை செய்த சிறுவன் சடலத்துடன் செக்ஸ் வைத்திருப்பதால் அவன் சைக்கோவாக இருக்கலாம் என போலீசார் கருதுகின்றனர். எனவே அவனை மன நல பரிசோதனைக்கு உட்படுத்தவும் போலீசார் முடிவெடுத்துள்ளனர். மேலும் சிறுவர் சீர்திருத்த பள்ளியில் சிறுவனை 24 மணி நேரமும் கண்காணிக்கவும் ஏற்பாடு செய்துள்ளனர்.