பள்ளி முடிந்து வீடு திரும்பிய 9ம் வகுப்பு மாணவி! 52 வயது போலீஸ்காரனால் நேர்ந்த விபரீதம்!

மும்பையில் பள்ளியில் இருந்து வீடு திரும்பிய மாணவியை கட்டிப் பிடித்த காவலர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.


மலாட் பகுதியில் உள்ள பள்ளி ஒன்றில் 9-ஆம் வகுப்பு படிக்கும் ஒரு மாணவி வழக்கமாக தனது மூத்த சகோதரியுடன் தான் பள்ளிக்குச் சென்று திரும்புவதுவழக்கம். ஆனால் கடந்த  திங்கட் கிழமை பள்ளித் தேர்வை முன்னதாகவே முடித்து விட்டதால் பள்ளியில் இருந்து தனியாக வீடு திரும்பிக் கொண்டிருந்தார்.  

அதானி நிறுவன அலுவலக பேருந்து நிறுத்தம் அருகே சென்றுகொண்டிருந்த போது அங்கு பாதுகாப்புப் பணியில் இருந்த 52 வயது காவலர் ஒருவர்  மாணவியை அருகில் அழைத்து வலுக்கட்டாயமாக கட்டிப்பிடித்ததாகக் கூறப்படுகிறது.  

அலறியடித்து தன்னை விடுவித்துக்கொண்ட மாணவி வீட்டுக்கு ஓடிச் சென்று தனது தாயிடம் நடந்ததைத் தெரிவித்தார். இதையடுத்து உடனடியாக காவல் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவித்த சிறுமியின் தாய் காவல் நிலையத்திலும் புகார் அளித்தார்.  

அதன் பேரில் மாணவியிடம் வாக்குமூலம் பெற்ற போலீசார் காவலர் மீது போக்சோ உள்ளிட்ட சட்டப் பிரிவுகளில் வழக்கு பதிவு செய்தனர். 

இந்தக் காவலர் பலமுறை தன்னிடம் தவறாக நடந்துகொள்ள முயன்றதாக மாணவி ஏற்கனவே தனது தாயாரிடம் புகார் தெரிவித்ததாகவும், ஆனால் அப்போதெல்லாம் அவர் அதனை பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை என்றும் கூறப்படுகிறது.