உங்கள் பகுதியில் குடிநீர் பிரச்னையா? திர்வுக்கான வருகிறது புதிய ஆப் !!!

கோடைகாலத்தில் நாம் அதிகமாக சந்திக்கும் பிரச்னை குடிநீர் பிரச்னை தான். குடிநீர் பற்றாக்குறையால் அன்றாட வாழ்வில் மக்கள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகிறார்கள் குறிப்பாக சென்னைவாசிகள் அடையும் துயரத்திற்கு அளவே கிடையாது.


இந்த குடிநீர் தட்டுப்பாட்டை தவிர்ப்பதற்காக சென்னை மெட்ரோ வாரியம் ஒரு புதிய முயற்சியை கையாண்டுள்ளது இதற்காக ப்ரேதேயகமாக ஒரு செயலியை உருவாக்கியுள்ளது.  இந்த செயலியின் பெயர் CMWSSB ஆகும்.


இந்த செயலியை பயன்படுத்தி பொதுமக்கள் தங்கள் பகுதியில் உள்ள குடி நீர் பிரச்சனையை உரிய அதிகாரிகளிடம் தெரிவிக்கலாம்.  இதன் மூலம் மக்களின் பிரச்சனைகள் நேரடியாக அதிகாரிகளிடம் கொண்டு செல்லப்படும. மேலும் அதிகாரிகளுக்கும் எந்த பகுதியில் என்ன பிரச்னை என்று தெளிவாக அறிந்து அதை சரி செய்ய முடியும்


இந்த செயலியை கூகுள் பிலே ஸ்டோர் மூலம் பொதுமக்கள் பதிவிறக்கம் செய்த்துக்கொள்ளலாம்.

பொதுமக்கள்  தங்களின் பெயர், முகவரி, கைபேசி எண், மின் அஞ்சல் முகவரி ஆகியவற்றை வைத்து புகார்  பற்றிய தகவல்களை பதிவு செய்யலாம்.


புகாரை பதிவு செய்த்தவுடன் பதிவு செய்த மொபைல் எண்ணிற்கு குறுஞ் செய்தி அனுப்பப்படும். மேலும் அதனை பற்றிய தகவல்களையும் பொதுமக்கள் தெரிந்துகொள்ளலாம். மேலும் இதன் மூலம் புகாரின் தற்போதய நிலையை பொதுமக்கள் அறிந்து கொள்ளலாம்.


இந்த செயலியை அமைச்சர் S. P.  வேலுமணி இன்று துவக்கி வைத்தார்.