வெளிநாட்டில் ஒரு கணவன்..! உள்ளூரில் இன்னொரு கணவனை ஏற்பாடு செய்த மனைவி..! ஆனால் அவருக்கு நேர்ந்த நெஞ்சை பதைபதைக்க வைத்த சம்பவம்!

வெளிநாட்டில் வேலை பார்க்கும் கணவன், கிராமத்தில் கள்ளக்காதலுடன் உல்லாசமாக இருந்த மனைவி, இவர்களிடையே தொந்தரவுவாக இருந்த ஐந்து வயது குழந்தையை கொன்ற சம்பவம் அப்பகுதி மக்களிடையே மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளது.


பஞ்சாப் மாநிலத்தின் Qila Barun கிராமத்தை சேர்ந்தவர் அமந்தீப் சிங். இவர் மனைவி நிர்மல் கவுர் . இந்த தம்பதிக்கு குர்லின் என்ற ஐந்து வயத்தில் மகள் ஒருவர் இருக்கிறார்.இந்நிலையில், அமந்தீப் கத்தார் நாட்டில் பணிபுரிந்து வந்தார்.

இந்த நிலையில் கடந்த 5ஆம் தேதி அன்று சிறுமி குர்லின் மர்மமான நிலையில் உயிரிழந்தார். அதே போல நிர்மல் கவுர் கடந்த 12ஆம் தேதி அன்று தனது வீட்டில் சடலமாக கிடந்துள்ளார். 

இதனையடுத்து சம்பவம் நடந்த இடத்திற்கு விரைந்த காவல்துறையினர், சம்பவம் தொடர்பாக விசாரித்தினர். அந்த விசாரணையில் வீட்டருகில் உள்ள சிசிடிவி காட்சிகளையும் ஆய்வு செய்தனர் காவல்துறையினர்.

அப்போது 12ஆம் தேதி நிர்மல் கவுர் வீட்டுக்கு ஹர்பிரீத் சிங், அவர் தாய், அத்தை, மாமா மற்றும் இன்னொரு உறவினர் வந்தது தெரியவந்தது. அவர்களை பிடித்து காவல்துறையினர் விசாரித்த போது பல்வேறு அதிர்ச்சி தகவல்கள் வெளியாகியுள்ளது. 

அவர்கள் அளித்த வாக்குமூலம் குறித்து காவல்துறையினர் கூறுகையில், அமந்தீப் வெளிநாட்டில் உள்ள நிலையில் அவர் மனைவி நிர்மல் கவுருக்கு ஹர்பிரீத்துடன் தொடர்பு ஏற்பட்டது. இந்த விவகாரம் ஒரு கட்டத்தில் இருவரும் திருமணம் செய்து கொள்ள முடிவெடுத்தனர். பின்னர் இவர்கள் இருவருக்கும் சிறுமி குர்லின் தடையாக இருப்பதாக இருவரும் கருதிய நிலையில் அவளுக்கு அதிகளவில் வாயில் மருந்தை ஊற்றி கொலை செய்துள்ளனர். 

பின்னர் நிர்மல் கவுர் தனது பெயரில் உள்ள சொத்துக்களை ஹர்பிரீத் மற்றும் அவர் அத்தை பெயரில் எழுதி வைத்துள்ளார். இதையடுத்து ஹர்பிரீத் தனது உறவினர்களுடன் சேர்ந்து நிர்மல் கவுருக்கும் அதிகளவு மருந்து கொடுத்து பின்னர் கழுத்தை நெரித்து கொலை செய்துள்ளார், இந்த வழக்கில் மூன்று பெண்கள் உள்ளிட்ட ஐவரை காவல்துறையினர் கைது செய்தனர். 

இந்த சூழ்நிலையில், வெளிநாட்டில் உள்ள அமந்தீப் தனது மனைவி மற்றும் மகள் மரணம் குறித்த செய்தி கேட்டு அதிர்ச்சியடைந்து அது தொடர்பாக அங்கிருந்தே புகார் அளித்தார். பின்னர் புகாரின் பெயரில் கொலை வழக்கு பதிவு செய்து அந்த வழக்கில் உயிரிழந்த நிர்மல் கவுர் தந்தை கராமித்துக்கும் தொடர்பு இருப்பதாக கூறியுள்ள நபரை காவல்துறையினர் தேடி வருகிறார்கள்.