ஒரே நேரத்தில் 2 ஆண்களுடன் உல்லாசம்! நேரில் பார்த்த தங்கைக்கு இளம் பெண்ணால் நேர்ந்த விபரீதம்!

உத்தரப் பிரதேச மாநிலத்தில் தனது 12 வயது தங்கையை இரு காதலர்கள் உதவியுடன் கொலை செய்த பெண்ணை போலீசார் கைது செய்துள்ளனர்.


முசாஃபர் நகரை அடுத்த கபூர்கர் கிராமத்தைச் சேர்ந்த பெண் காஜல். இவர் மோகித், பாரத் வீர் என்ற இரு நபர்களை ஒரேநேரத்தில் காதலித்து வந்ததாகக் கூறப்படுகிறதுஅதாவது இது முக்கோணக் காதல் கதை இல்லை.

 

இரண்டு ஆண்களையும் ஒரே நேரத்தில் அவர்களுக்கே தெரிந்து காஜல் காதலித்து வந்துள்ளார். அவ்வப்போது மூன்று பேரும் ஒன்றாக சந்தித்த உல்லாசம் அனுபவிப்பது வழக்கம். கடந்த வாரம் மூன்று பேரும் உல்லாசமாக இருப்பதை காஜலின் 12 வயது தங்கை ஹிமான்ஷி பார்த்துள்ளார்.

 

தனது மோசமான நடத்தை தங்கை ஹிமான்ஷிக்கு தெரிய வந்ததையடுத்து காஜல் பதறினார். தனது கேவலக் குட்டு வெளிப்பட்டு விடக் கூடும் என அஞ்சிய காஜல் தங்கையை தீர்த்துக் கட்டத் துணிந்தார்

 

இதையடுத்து தனது இரு காதலர்களின் உதவியை காஜல் நாடியதையடுத்து அவர்கள் இருவரும் சேர்ந்து ஹிமான்ஷியை கழுத்தை நெறித்துக் கொன்றனர்.

 

சந்தர்ப்ப சாட்சியங்களும், விசாரணையும் தடயங்களும் காஜலைக் காட்டிக் கொடுக்க தற்போது கம்பி எண்ணிக் கொண்டிருக்கிறார். தலைமறைவான காதலர்கள் இருவரையும் போலீசார் தேடி வருகின்றனர்

 

இதனிடையே ஹரியானா மாநிலம் ஹிசார் நீதிமன்றம் தனது தங்கையைக் கொன்ற அசோக் என்ற நபருக்கு மரண தண்டனை விதித்துள்ளது, ஹிசார் மாவட்டம் ஜுக்லன் என்ற கிராமத்தைச் சேர்ந்த அசோக் வேறு வகுப்பைச் சேர்ந்த பெண்ணைத் திருமணம் செய்துகொண்டதாகவும், அதனை அவரது குடும்பத்தினர் எதிர்த்த ஆத்திரத்தில் தனது தங்கையை கொலை செய்ததாகவும் கூறப்படுகிறது