7 வருட காதல்..! திருமண நாள் நெருங்கியது..! காதலனின் ரகசிய வாழ்க்கை குறித்து தெரிந்து அதிர்ந்த மாற்றுத்திறனாளி பெண்! கரூர் அதிர்ச்சி!

திருமணம் செய்வது கொள்வதாக ஆசைவார்த்தை காதலித்து ஏமாற்றிய இளைஞர் மீது மாற்றுத் திறனாளி பெண் புகார் கொடுத்ததை அடுத்து அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.


கரூர் மாவட்டம் குளித்தலையை சேர்ந்த தேவி என்பவர் குழந்தைகள் காப்பகத்தில் பணிபுரிந்து வருகிறார். குழந்தைகள் காப்பகத்தில் அடிக்கடி அன்னதானம் வழங்குவார்கள் என்பதால் அங்கு அடிக்கடி கண்ணன் என்பவர் வந்து சென்றுள்ளார். இதை அடுத்து மாற்றுத் திறனாளியான தேவியுடன் கண்ணணுக்கு பழக்கம் ஏற்பட்டுள்ளது.

நாளடைவில் காதலாக இவர்கள் உறவு மலர அதை பயன்படுத்தி தேவியிடம் 70 ஆயிரம் ரூபாய் கண்ணன் வாங்கியதாக கூறப்படுகிறது. இந்நிலையில் இவர்கள் இருவரும் கடந்த 7 வருடமாக காதலித்து வந்துள்ளனர். இதற்கிடையே திருமணம் செய்து கொள்ளலாம் என முடிவு செய்த கண்ணன் அதற்கான ஏற்பாடுகளை செய்யுமாறு தேவியின் குடும்பத்தாரிடம் சொல்லி உள்ளார்.

திருமணத்திற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வரும் நிலையில், தேவியின் செல்போனுக்கு ஒரு எஸ்.எம்.எஸ். வந்தது. அதில் திருமண ஏற்பாடுகளை நிறுத்துமாறு கண்ணன் அனுப்பிய செய்தியை பார்த்து தேவி அதிர்ச்சி அடைந்தார். இதையடுத்து சந்தேகம் அடைந்த தேவி கண்ணன் குறித்து விசாரிக்க அப்போதுதான் அவருக்கும் கயல்விழி என்ற பெண்ணுக்கும் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பே திருமணம் நடந்திருப்பது தெரியவந்தது.

இதனால் வேதனை அடைந்த தேவி உடனடியாக கண்ணன் மீது போலீசில் புகார் அளிக்க தற்போது அவர்மீது 6 வழக்குகள் பதியப்பட்டு கம்பி எண்ணிக் கொண்டிருக்கிறார். போலீசார் மேற்கொண்ட விசாரணையில் கண்ணன் பல பெண்களை திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி மோசடி செய்தது வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

3 வருடமாக வேறு பெண்ணுடன் வாழும் நபரை தேவி ஏமாந்தது மட்டுமின்றி கணவர் சிறைக்கு சென்றதால் கயல்விழியும் தற்போது வாழ்க்கையை தொலைத்து நிற்கிறார்.