2வது காதலன் வீட்டில் இருந்த மோனிகா! அங்கு வந்த முதல் காதலன்! 2 பேரும் சேர்ந்து காதலியை செய்த பகீர் செயல்..! நெஞ்சை உலுக்கும் சம்பவம்!

கர்நாடக மாநிலம் பெங்களூருவில் தன்னிடம் காதலை முறித்துக்கொண்ட பெண் வேறு ஒருவரை காதலித்ததால் ஆத்திரமடைந்த இளைஞர் கொடூரமாக தாக்கியதில் அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.


பெங்களூரு சோழதேவனஹள்ளியை சேர்ந்த பவித் என்ற கல்லூரி மாணவருக்கும் கல்லூரியில் என்ஜினீயரிங் படித்து வந்த மோனிகா என்பவரும் காதலித்து வந்துள்ளனர். இருவரும் 4 ஆண்டுகளாக தீவிரமாக காதலித்து வந்த நிலையில் சில மாதங்களுக்கு முன்பு ஏற்பட்ட பிரச்னையில் மோனிகா தன்னுடைய காதலை முறித்துக்கொண்டார். இதனால் வேதனை அடைந்த பவித் பலமுறை மோனிகாவை தொடர்பு கொண்டார். ஆனால் அவரின் அழைப்பை ஏற்கவில்லை.

இந்நிலையில் மோனிகா சோழதேவனஹள்ளியை சேர்ந்த ராகுல் என்பவரை காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. ராகுலின் வீட்டிற்கு மோனிகா அடிக்கடி சென்று வந்துள்ளார். இதை கேள்விப்பட்டட முன்னாள் காதலன் பவித் கடுப்பாகி பிரச்சனை செய்வதற்காக ராகுல் வீட்டிற்கு சென்றுள்ளார். அங்கே மோனிகா, ராகுல் இருவரும் தனிமையில் இருப்பதை பார்த்த பவித்துக்கு மேலும் கடுப்பானது. பின்னர் மோனிகாவுடன் சண்டை போட்டார்.

இவர்கள் சண்டையை பார்த்து அதிர்ச்சி அடைந்த ராகுல், ஏற்கனவே ஒருவரை காதலித்ததை ஏன் என்னிடம் சொல்லவில்லை என மோனிகாவை கடிந்து கொண்டார். பின்னர் மோனிகாவை தனது மோட்டார் சைக்கிளில் தன்னுடைய வீட்டுக்கு பவித் அழைத்து வந்தார். அங்கு வந்ததும் இருவருக்கும் மீண்டும் சண்டை போட்டுள்ளனர். பிரச்சனை பெரிதாக பவித் தலைக்கவசத்தால் மோனிகாவின் மண்டையில் ஓங்கி அடித்துள்ளார். இதில் படுகாயமடைந்த மோனிகா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்று பரிதாபமாக இறந்தார்.

இதையடுத்து சம்பவம் குறித்து அறிந்த போலீசார், ராகுல், பவித்தை கைது செய்தனர். இதற்கிடையே மோனிகாவின் உடலை பார்த்து கதறி அழுத அவரது பெற்றோர், இந்த கோலத்தில் பார்க்கவா உன்னை கஷ்டப்பட்டு படிக்க வைத்தேன் என கதறினார்கள்.