அதிவேகமாக சுழன்ற ராட்டினம்! தூக்கி வீசப்பட்ட சிறுவன்! பிறகு நேர்ந்த பயங்கரம்!

வேலூர் மாவட்டத்தில் உள்ள வாணியம்பாடியில் ராட்டினத்தில் சிக்கி சிறுவன் ஒருவன் உயிரிழந்தது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ராட்டினமானது அனுமதியின்றி வைக்கப்பட்டிருந்ததாகவும் இறந்த சிறுவன் ஒன்பதாம் வகுப்பு படித்து வந்ததாகவும் விசாரணையில் தெரியவந்துள்ளது.


இந்திய நாட்டில் 5-ஆம் தேதி அன்று ரம்ஜான் பண்டிகை சிறப்பாக கொண்டாடப்பட்டது. வேலூர் மாவட்டத்தில் வாணியம்பாடி பகுதி அமைந்துள்ளது. இங்கு ரம்ஜான் பண்டிகைக்காக பொருட்காட்சி திடல் அமைக்கப்பட்டிருந்தது.

பொதுமக்களின் கவனத்தை ஈர்க்கும் வகையில் பல்வேறு கடைகளும் விளையாட்டு அம்சங்களும் திடலில் வைக்கப்பட்டிருந்தன. அவ்வகையில் சறுக்குமரம் ராட்டினங்கள் முதலியன வைக்கப்பட்டிருந்தன.

திடலுக்கு அருகே உள்ள காவாக்கரை பகுதியை சேர்ந்தவர் மாணவர் விஷ்ணு. இவர் 9-ஆம் வகுப்பு படித்து வருகிறார். இவரும் வாணியம்பாடியில் அமைக்கப்பட்டிருந்த பொருட்காட்சி திடலுக்கு ரம்ஜான் அன்று வந்துள்ளார். அப்போது அங்கு வேகமாக இயங்கிக்கொண்டிருந்த ராட்டினத்தின் அருகில் சென்றுள்ளார்.

எதிர்பாராதவிதமாக ராட்டினத்தின் வேகம் அதிகரித்ததால் விஷ்ணு தூக்கி வீசப்பட்டார். அவருடைய கை மற்றும் தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. அங்கிருந்த பொதுமக்கள் அவரை அருகிலிருந்த அரசு மருத்துவமனைக்கு விரைவாக அழைத்துச்சென்றனர். ஆனால் துரதிர்ஷ்டவசமாக செல்லும் வழியிலேயே விஷ்ணு உயிரிழந்தார். 

உடனே இந்தத் துயர சம்பவம் பற்றி அப்பகுதியை காவல்துறையினரிடம் தகவல் தெரிவிக்கப்பட்டது. அப்போது அங்கிருந்த பொதுமக்கள் ராட்டினங்கள் அனுமதியின்றி வைக்கப்பட்டிருந்ததாகவும் மேலும் எவ்வித பாதுகாப்பு அம்சங்கள் இன்றி ராட்டினங்கள் செயல்பட்டு வந்ததாகவும் காவல்துறையினரிடம் புகார் அளித்தனர்.

காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். மேலும் 9-ஆம் வகுப்பு படிக்கும் சிறுவன் எதிர்பாராதவிதமாக இறந்த சம்பவம் அப்பகுதி மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.