நீங்கள் என் சிறந்த நண்பர்..! கடிதம் எழுதிவிட்டு ஆற்றில் குதித்த 15 வயது மாணவி! உடலை கண்டுபிடித்தவர்களின் பகீர் அனுபவம்!

9-ஆம் வகுப்பு மாணவியொருவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவமானது ஆந்திராவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


ஆந்திர மாநிலத்தில் குண்ட்லகம்மா நதி அமைந்துள்ளது. இந்த நதியின் பாலத்திற்கு அருகே நேற்று மக்கள் கூட்டம் மிகுதியாக இருந்தது. மக்களின் பாதுகாப்பிற்காக காவல்துறை அதிகாரியான சுப்புராஜு ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது அவருக்கு கடிதம் ஒன்று கிடைத்தது.

அந்த கடிதத்தில், "நீங்கள் என்னுடைய சிறந்த நண்பர். நீங்கள் தற்போது எவ்வாறு இருந்தாலும் சரி. ஆனால் நீங்கள் நன்றாக இருக்க வேண்டும் என்று எண்ணுகிறேன்" என்று எழுதப்பட்டிருந்தது. சந்தேகித்த சுப்புராஜ் உடனடியாக மற்ற காவல்துறையினரிடம் தகவல் தெரிவித்தார்.

தகவல் அறிந்து விரைந்து வந்த பிற காவல்துறையினர் அந்த நதியில் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். சுமார் 3 மணி நேர தேடுதல் வேட்டைக்கு பிறகு ஆற்றிலிருந்து ஒரு பெண்ணின் சடலத்தை மீட்டெடுத்தனர். அந்த பெண்ணின் உடலை பரிசோதனைக்கு அருகிலுள்ள அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

காவல்துறையினர் விசாரணை நடத்தியதில் 15 வயதான தேவி என்ற 9-ஆம் வகுப்பு பயிலும் மாணவியே தற்கொலை செய்து கொண்டுள்ளார் என்பதை கண்டறிந்தனர். மேலும் அவருடைய தாயார் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். புகாரை பெற்றுக் கொண்ட காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த சம்பவமானது ஆந்திர மாநிலத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.