ஹோமோசெக்ஸ்! டிரைவருடன் ஓடிப் போன 9ம் வகுப்பு மாணவன்! ஈரோடு அதிர்ச்சி!

ஈரோடு அருகே ஒன்பதாம் வகுப்பு படித்து வரும் மாணவன் பள்ளி முடித்து வீடு திரும்பாததால் அதிர்ச்சியடைந்த பெற்றோர் உடனே தங்களின் மகனை கண்டுபிடித்து தருமாறு காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளனர் .


ஈரோடு மாவட்டம் கொடுமுடி அருகே உள்ள சின்ன கண்டனூர் பகுதியை சேர்ந்த ஒன்பதாம் வகுப்பு மாணவர் கடந்த வாரம் முன்பு திடீரென மாயமனார்.இந்நிலையில் நாமக்கல் மாவட்டம் நாமகிரிப்பேட்டையில், வெற்றிவேல் என்பவரிடம் இருந்து சிறுவனை காவல்துறையினர் மீட்டனர். இதுகுறித்து வெற்றிவேலிடம் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

விசாரணை முடிவில் போலீசார் கூறியதாவது அந்த மாணவன் தினமும் பேருந்தில் தான் பள்ளிக்கு வருவார் பள்ளிக்கு செல்லும்போது பேருந்து நண்பராக அறிமுகமாகிய சில நாட்கள் நன்றாக சென்ற நிலையில் மாணவரை சிறுசிறு பாலியல் சீண்டல்கள் செய்துள்ளார் வெற்றிவேல். இதையடுத்து ஒரு நாள் பள்ளி முடிந்து மாலை வேளையில் வெற்றிவேல் அம்மாணவனை பேருந்தில் சந்தித்துள்ளார். இருவரும் நன்றாகப் பேசிக் கொண்டிருந்த நிலையில் திடீரென மாணவனை அவரது நிறுத்தத்தில் இறங்க விடாமல் தன்னுடன் தன் வீட்டிற்கு வர வேண்டும் என வற்புறுத்தி உள்ளார் வெற்றிவேல்.

இதனால் அம்மாணவன் அவரது வீட்டிற்கு சென்றுள்ளார். இதையடுத்து வெற்றிவேல் அந்த மாணவரை பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக்கியுள்ளார். கடந்த ஒரு வாரமாகவே மாணவனை பாலியல் ரீதியாக துன்புறுத்தி உள்ளார் வெற்றிவேல்.ஒரு வாரம் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டிருந்த காவல்துறையினர் அச்சிறுவன் நாமக்கல்லில் இருப்பதை கண்டறிந்தனர்.

உடனே சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர் வெற்றிவேலை கைது செய்தனர். வெற்றிவேல் ஆம்மாணவனை பாலியல் துன்புறுத்தலுக்காக கடத்தி வந்துள்ளார் என்பது விசாரணையில் தெரியவந்தது. இதையடுத்து வெற்றிவேலை போக்சோ சட்டத்தின் கீழ் காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர். சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதே சமயம் விசாரணையின் போது தான் விருப்பப்பட்டடே டிரைவருடன் சென்றதாக கூறி சிறுவன் அதிர வைத்துள்ளான்.