உடலெல்லாம் ரத்தம்! உயிருக்கு துடியாய் துடித்த 9 மாத கர்ப்பிணி! கணவனுடன் சென்ற பெண்ணுக்கு நடுரோட்டில் அரங்கேறிய பயங்கரம்! மதுரை பதைபதைப்பு!

மதுரை மாவட்டத்தில் இருசக்கர வாகனத்தில் சென்றவர்கள் மீது ஜேசிபி மோதியதில் 9மாத கர்ப்பிணிப்பெண் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இச்சம்பவம் அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.


மதுரையைச் சேர்ந்தவர் கதிரேசன் திருப்பதி 30, இவருக்கும் கனிமொழி 23 , என்பவருக்கும் கடந்த ஆண்டு திருமணம் நடைபெற்றது.இந்நிலையில் கனிமொழியை தற்போது 9 மாத கர்ப்பிணியாக இருந்துள்ளார். இந்நிலையில் வரும் 10ம்தேதி கனிமொழிக்கு வளைகாப்பு செய்வதாக இருந்துள்ளது. இதையடுத்து கனிமொழிக்கு பரிசோதனைக்காக மருத்துவமனை சென்று அங்கு அவருக்கு பரிசோதனை முடித்து விட்டு வீடு திரும்பியுள்ளனர்.

அப்போது எதிர்பாராதவிதமாக அவர்களது இருசக்கர வாகனத்திற்கு பின்னே வந்த ஜேசிபி வாகனம் இவர்களது வாகனத்தின் மீது வேகமாக மோதியது. இந்நிலையில் இருவரும் தூக்கி வீசப்பட்டு சாலையின் ஓரத்தில் விழுந்தனர். உடனே அருகில் இருந்தவர்கள் ஓடிவந்து இருவரையும் காப்பாற்ற முயன்றுள்ளனர். இருந்தபோதிலும் தூக்கி வீசப்பட்டதில் கனிமொழியின் தலை ரோட்டின் ஓரத்தில் இருந்த கல் மீது பலமாக மோதியது அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

இதையடுத்து ஆம்புலன்ஸ் மூலம் அவரது உடல் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது. பின்னர் அவரது வயிற்றில் இருந்த குழந்தை உயிருடன் இருப்பதாக தெரிவித்த மருத்துவர்கள் அவருக்கு அறுவை சிகிச்சை செய்யத் தொடங்கினர். பின்னர் அறுவை சிகிச்சையின் முடிவில் குழந்தை இறந்து பிறந்ததாக தெரிவித்துள்ளனர்.

இதையடுத்து அவருக்கு பிறந்தது ஆண் குழந்தை எனவும் மருத்துவர்கள் கூறியுள்ளனர். மற்றும் விபத்தில் படுகாயம் அடைந்த அவரது கணவருக்கு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது குறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.