ஜெயங்கொண்டம் அருகே உள்ள கிராமத்தில் இரக்கமற்ற இரு மகன்கள் தனது தாயை பார்த்துக்கொள்வதில் சிக்கல்.
நோயால் தவித்த வயதான தாய்! நடுரோட்டில் வீசிய இரக்கமற்ற மகன்கள்! பிறகு அரங்கேறிய நெகிழ்ச்சி சம்பவம்!

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே உள்ள கிராமத்தில் பட்டம்மாள் எனும் 95 வயது மதிக்கத்தக்க முதியவர் வசித்து வந்தார். இவருக்கு இரு மகன்களும், இரு மகள்களும் உள்ளனர். பட்டம்மாளின் கணவர் ஐந்து வருடங்களுக்கு முன்பு இறந்துவிட்டதால், தாயை யார் பார்த்துக் கொள்வது என்பதில் இரு மகன்களுக்கும் இடையே சிக்கல் ஏற்பட்டது.
இந்நிலையில் இரு மகன்களுக்கும் ஒருவருக்கொருவர் தாய் பட்டம்மாளை மற்றவரின் வீட்டுத் திண்ணைகளில் தூக்கிப்போட்டு அலைக்கழித்தனர். இறுதியாக இருவரும் பட்டம்மாளை வீதியில் உள்ள சாலையில் போட்டுவிட்டு சென்றனர். அக்கம் பக்கத்தில் இருந்தோர் இரண்டு மகன்களிடமும் இது குறித்து பேசிப் பார்த்து எந்தவித பயனும் இல்லை.
செய்வதறியாது மரத்தடியில் இருந்த பட்டம்மாள், குளிர் மற்றும் கொசுக்கடி தாங்க முடியாமல் அவதிப்பட்டு வந்தார். இதனை கண்ட ஒருவர் உடனடியாக அருகிலிருந்த அரசு மருத்துவமனையில் அனுமதித்தார்.
இந்த விவகாரம் ஜெயங்கொண்டான் டிஎஸ்பி வரை சென்றது. அவர் பட்டம்மாளின் இரு மகன்களையும் அழைத்து அறிவுரை செய்தார். இருவரும் மாதம் 15 நாள் வீதம் தங்களது வீட்டில் வைத்து பராமரிக்க வேண்டும். இல்லையேல், வேறொருவரை அனுமதித்து அவருக்கு பணம் கொடுத்துவிட வேண்டும் என அறிவுரை செய்தபிறகு பிரச்சினை சுமூகமானது.