அந்த டைரக்டர் என்னை ஏமாற்றிவிட்டார்..! 20 ஆண்டுகள் பிளாஸ்பேக் சொல்லும் மந்த்ரா!

தமிழ் மற்றும் தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் நடிகை மந்த்ரா.


தொண்ணூறுகளின் பிரபலமான நடிகையாக தெலுங்கு மற்றும் தமிழ் சினிமாவில் வலம் வந்தவர் நடிகை மந்த்ரா. இருபது ஆண்டுகளுக்கு முன்பு தன் வாழ்வில் நடந்த பிளாஷ்பேக்கை தற்போது பகிர்ந்திருக்கிறார். அதாவது கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இயக்குனர் தேஜா தன்னை கதையை மாற்றி கூறி ஏமாற்றியதாக கூறியுள்ளார் நடிகை மந்த்ரா.

அந்த நாட்களில் நடிகர் மகேஷ்பாபு நடிப்பில் வெளியான ஒக்கடு திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது. அந்நிலையில் இயக்குனர் தேஜா என்னை வந்து சந்தித்தார். அப்போது எனக்கு ஒரு படத்தில் நடிக்கும் வாய்ப்பை அளித்தார். அப்போது பேசிய அவர் படத்தில் என்னுடைய கதாபாத்திரத்தை பற்றியும் குறிப்பிட்டிருந்தார். அதில் நடிகர் கோபிசந்த் உடன் இணைந்து காதல் செய்வது போல் என்னுடைய காட்சிகள் அமையும் என்று இயக்குனர் தேஜா கூறினார்.

இதனை நம்பி நான் படத்தில் நடிப்பதற்கு சம்மதித்து முன் பணம் பெற்றுக் கொண்டேன். ஆனால் முதல் நாள் படப்பிடிப்பிலேயே என்னுடைய கதாபாத்திரம் படத்தில் எதிர் மாதிரியான கதாபாத்திரம் என்பதை என்னால் உணர முடிந்தது . இதனைப் பற்றி தெரிந்தும் நான் திரைப்படத்தை விட்டு விலகாமல் இருந்து விட்டேன். இத்தனை நாள் நான் சம்பாதித்த பெயரை கெடுத்துக் கொள்ள நான் விரும்பவில்லை என்பதால் தொடர்ந்து அந்த திரைப்படத்தை நடித்துக் கொடுத்தேன் என சோகத்துடன் தன்னுடைய ஃப்ளாஷ் பேக்கை டிவி சேனல் ஒன்றில் பகிர்ந்து கொண்டார் நடிகை மந்த்ரா.