1 மணிநேரம் மட்டும் மனைவி! பிரபலமாகும் இன்பத் திருமணம்! வரதட்சனை கொடுத்து பெண்களை துஷ்பிரயோகம் செய்யும் விபரீத சடங்கு!

ஈராக்கில் பாலியல் உறவில் ஈடுபடுவதற்காக 9 வயதுக்கு மேற்பட்ட சிறுமிகளை ஒருமணிநேரத்திற்காக மட்டும் இன்பத் திருமணம் செய்து கொள்ளும் அதிர்ச்சிகர சம்பவம் வெளியாகி உள்ளது


வரதட்சணை கொடுத்து இன்பத் திருமணம் செய்துகொள்ள இஸ்லாமிய மதகுருக்கள் அனுமதிப்பதாக பிபிசியில் வெளியான ஆவணப்படம் மூலம் தெரியவந்துள்ளது.  

இன்பத் திருமணம் என்பது மனைவியை பிரிந்து வாழ்ந்து வருபவர் சுமார் ஒரு மணிநேரத்திற்காக மட்டும் ஒரு சிறுமியை தற்காலிக மனைவியாக்கிக் கொள்வார். ஒரு மணி நேரம் அவருடன் உறவு கொண்டுவிட்டு அனுப்பி வைத்து விடுவார். இதற்காக அந்த சிறுமிக்கு வரதட்சினை என்ற பெயரில் பணம் தருவதாகவும் அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது.

ஈராக்கின் புனிதமான இடங்களில் ஒன்றான கர்பலாவுக்குச் சென்ற பிபிசி பத்திரிக்கையாளர் ரகசியமாக படம் பிடித்தபோது இந்த விஷயங்கள் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. ஈராக்கில் தடை செய்யப்பட்ட இன்பத் திருமண முறையை நடத்தி வைக்க 8 மதகுருக்கள் தயாராக இருப்பதாகவும் பிபிசி ஆவணப்படத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

ஒரு வாடிக்கையாளர் போல் மதகுரு ஒருவரை அணுகும் பிபிசி செய்தியாளர், 12 வயதான ஆதரவற்ற சிறுமியுடன் இன்பத் திருமணம் செய்து கொள்ள வேண்டும் எனவும் நிரந்தரத் திருமணம் வேண்டாம் என்றும் தெரிவிக்கிறார். அதற்கு அவரும் 9 வயதுக்கு மேல் இருந்தால் ஷரியா சட்டப்படி அது ஒரு பிரச்சனையே அல்ல என்றும் கூறுவதும் ஆவணப்படத்தில் தெரிகிறது.

மற்றொரு மதகுரு ஒரு மணி நேரம் முதல் 99 ஆண்டுகள் வரை காலத்துக்கு ஏற்ப வரதட்சணை கொடுத்து சிறுமியை திருமணம் செய்து கொள்ளலாம் என்றும் இது குழந்தைச் சுரண்டல் ஆகாது என்றும், சிறுமியின் விருப்பதோடு செய்வதாலும், பணம் தருவதாலும் இது ஒரு பிரச்சனையே இல்லை என்றும் ஆவணப்படம் கூறுகிறது. குழந்தைகளின் வறுமையை பயன்படுத்தி இதுபோன்ற சம்பவங்கள் நடப்பதாகவும், சிறுமிகள் புகார் தராதவரை மதகுருக்கள் மீது நடவடிக்கை எடுக்க முடியாது என அரசு அதிகாரிகள் தரப்பில் பதிலளிப்பதாக அந்த ஆவணப்படத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.