9 வயது சிறுமியை சீரழித்த மாமன்! குட் டச் - பேட் டச் விழிப்புணர்வால் சிக்கினான்!

பள்ளி ஒன்றில் நல்ல தொடுதல் - தவறான தொடுதல் குறித்து பாட விளக்கத்தால் சிறுமியிடம் அத்துமீறிய மாமன் சிக்கியுள்ளான்.


பாலியல் குறித்த விழிப்புணர்வோ புரிதலோ இல்லாத சிறுவர், சிறுமியர் அப்பாவிகளாகவும், அதுபோன்ற சம்பவங்கள் தங்களுக்கோ, தங்கள் கண் முன்னோ நடைபெற்றாலும் அதன் அர்த்தங்களை தெரிந்துகொள்ள முடியாதவர்களாகவே இருக்கிறார்கள்.

 

அவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பள்ளிகளில் நடத்தப்படும் குட் டச் - பேட் டச்  எனப்படும் நல்ல தொடுதல் - தவறான தொடுதலை புரிந்துகொள்ளச் செய்யும் விளக்க வகுப்புகள் பலனளிக்கவே செய்கின்றன.

 

அதற்கு சான்றுதான் டெல்லியில் நடைபெற்ற இந்தச் சம்பவம். டெல்லியின் விவேக் விஹார் என்ற இடத்தில் உள்ள ஒரு பள்ளியின் ஒரு வகுப்பில் கடந்த வியாழக்கிழமை ஆசிரியை நல்ல தொடுதல் - தவறான தொடுதல் குறித்த விளக்க வகுப்பு எடுத்துக்கொண்டிருந்தார்.

 

அதனைக் கூர்ந்து கவனித்துக் கொண்டிருந்த ஒரு 9 வயது மாணவிக்கு ஏதோ புரிவது போல் இருந்தது. தனது இருக்கையை விட்டு எழுந்த மாணவி ஆசிரியையிடம் சென்றாள்.

 

தனது வீட்டில் தங்கியிருக்கும் தான் மரியாதையுட்ன் அங்க்கிள் என அழைக்கும் ஒருவர் தன்னை ஆசிரியை கூறிய சில வகைகளில் தொடுவதாகவும் அது தவறான தொடுதலா என்றும் கேள்வி எழுப்பினாள்.

 

இதையடுத்து ஆசிரியைக்கு பிரச்சினை புரிய வர சிறுமியின் பெற்றோரை தொடர்பு கொண்ட ஆசிரியை விவரத்தைத் தெரிவித்தார். இதனைத் தொடர்ந்து அந்தச் சிறும் தனது பெற்றோரிடம் அந்த நபர் தன்னை தவறான இடங்களில் தொட்டதையும் கூறியுள்ளார்.

 

இதுநாள் வரை அதன் வேறுபாடு தனக்கு தெரியாமல் இருந்த நிலையில் ஆசிரியை விளக்கியதையடுத்து புரிந்துகொண்டதையும் விளக்கினாள்

 

இதையடுத்து சிறுமியின் பெற்றோர் விவேக் விகார் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.

 

புகாரின் பேரில் தொடர்புடைய 37 வயது குற்றவாளியான சிறுமியின் மாமன்  மீது போக்சோ உள்ளிட் பிரிவுகளில் வழக்கு பதிவு செய்து போலீசார் கைது செய்தனர்.