ராணுவ மரியாதையுடன் அடக்கம் செய்யப்பட்ட டச்சு நாய்! நெகிழ வைக்கும் காரணம்!

இந்திய ராணுவத்தில் பணியாற்றிய 9 வயது நாய் இறந்து சம்பவமானது ராணுவ வீரர்களுக்கு பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.


கிழக்கு ராணுவத்தில் "டச்சு" என்ற 9 வயது நாய் பல வருடங்களாக பணியாற்றி வந்தது. இந்திய ராணுவத்தினருக்கு இந்த மோப்ப நாய் பேருதவி செய்து வந்தது. மறைத்து வைக்கப்பட்டிருந்த வெடிகுண்டுகளை கண்டுபிடித்து எந்தவித அசம்பாவிதமும் நேராமல் பாதுகாத்து வந்தது. பல சம்பவங்களில் நினைவுகூறத்தக்க வகையில் களப்பணிகளை மேற்கொண்டது.

ராணுவ வீரர்களுக்கு உற்ற நண்பனாக இருந்த டச்சு 11-ஆம் தேதியன்று இயற்கை எய்தியது. டச்சு இறந்த செய்தியானது ராணுவ வீரர்களுக்கு பெருத்த சோகத்தை ஏற்படுத்தியது. கொல்கத்தாவில் ராணுவ வீரர்களின் முன்னிலையில் மலர்கொத்து வைத்து இறுதி மரியாதை செலுத்தினர். இறுதி சடங்கில் ஏராளகணக்கான ராணுவ வீரர்கள் கலந்து கொண்டனர்.

இந்த சம்பவமானது ராணுவ வீரர்கள் இடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.