ஆம்புலன்ஸ் தர மறுப்பு! மகனை கைகளில் ஏந்திச் சென்ற ஏழைத் தாய்! வழியில் ஏற்பட்ட விபரீதம்!

உத்திர பிரதேசத்தில் உடல் நலகுறைவால் பாதிக்கபட்ட சிறுவன் மேல் சிகிச்சைகாக செல்ல ஆம்புலன்ஸ் இல்லாததால் தாயே தூக்கி சென்ற அவலம், மேலும் பாதி வழியில் சிறுவன் உயிரிழந்த சம்பவம் கேட்போர் மனதை உருகசெய்கிறது.


ஷாஜகான் பூரில், காய்ச்சல் அதிகமானதால் அருகில் உள்ள மருத்துவமனைக்கு சிறுவன் அவ்ரோஸ் அனுமதிக்கபட்டான், ஆனால் அவனுக்கு மேல் சிகிச்சை தேவைபட்டதால் லக்னோ மருத்துவமனைக்கு கொண்டு செல்ல மருத்துவர்கள் கூறியுள்ளனர்.

ஆனால் கையில் காசு இல்லாமல் தவித்த பெற்றோர் அந்த மருத்துவமனையின் ஆம்புலன்ஸில் அனுப்ப கோரி வேண்டுகோள் விடுத்துள்ளனர், இது பற்றி கூறும் போது அவ்ரோஸின் தந்தை மூன்று ஆம்புலன்ஸ் அந்த வளாகத்தில் வெறுமையாகத்தான் நிறுத்தி வைக்கபட்டிருந்தது எனினும் அவர்கள் ஏன் கொடுக்கவில்லை என புரியவில்லை என கூறினார்.

வேறு வழியில்லாமல் சிறுவனை அவனது தாயே தோளில் தூக்கி கொண்டு இருவரும் நடக்க துவங்கினோம் ஆனால் பாதி வழியில் மகன் அவ்ரோஸ் உயிர் பிரிந்துவிட்டதாக கூறினார்.

இது குறித்து பேசிய அந்த அவசர சிகிச்சை பிரிவு அதிகாரிய சிறுவன் பெற்றோர் வேண்டுமென்றே இது போன்ற பழிகளை சுமத்துவதாகவும், இதில்  அலட்சியமாக பெற்றோர் தான் நடந்து கொண்டதாகவும் தெரிவித்தார்