படிக்குறது வெறும் 9ம் வகுப்பு..! ஆனால் போகப்போறது நாசாவுக்கு..! எப்படி, ஏன் தெரியுமா?

அமெரிக்காவில் உள்ள நாசா விண்வெளி மையத்திற்கு செல்ல உள்ள அபிநயாவை பாராட்டி முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ரூபாய் 2 லட்சத்தை ஊக்கத்தொகையாக அளித்துள்ளார். ..


கடந்த சில தினங்களுக்கு முன்பாக அமெரிக்கா மற்றும் சென்னையில் உள்ள அமைப்பு ஒன்றிணைந்து இந்தியா முழுவதும் உள்ள ஆறாம் வகுப்பு முதல் பன்னிரண்டாம் வகுப்பு வரை உள்ள பள்ளி மாணவ மாணவிகளுக்கு அறிவியல் தேர்வு ஒன்றை நடத்தியது. இந்த தேர்வில் நாமக்கல்லை சேர்ந்த அபிநயா என்ற 9-ம் வகுப்பு மாணவி இணையதளத்தின் வாயிலாக கலந்து கொண்டார். இந்த பங்கேற்ற அவர் நல்ல மதிப்பெண்களைப் பெற்று வெற்றி பெற்றிருக்கிறார்.

இதனை அறிந்த நம்முடைய தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அபிநயாவுக்கு ஊக்கத் தொகையாக ரூபாய் 2 லட்சத்தை நிதியுதவி வழங்குமாறு உத்தரவிட்டிருக்கிறார். இந்த தேர்வில் வெற்றி பெற்றதன் மூலம் அபிநயா சர்வதேச விண்வெளி தளத்திற்கு செல்லவும் அங்கு நடைபெறும் மாநாட்டில் கலந்து கொள்ளவும் அவர் தேர்வாகி இருக்கிறார். இதில் கலந்துகொள்ளும் அவரை பாராட்டி முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு வெளியிட்டு இருக்கிறார்.

மேலும் இதுபோன்ற மாணவ-மாணவிகள் நம் நாட்டின் வளர்ச்சிக்காக பாடுபட்டு தொலைநோக்கு பார்வையுடன் செயல்பட்டு நம் நாட்டை முன்னேற்றப் பாதைக்கு அழைத்துச் செல்ல வேண்டும் எனவும் அவர் கூறியிருக்கிறார். எதிர்கால சமுதாயத்தினரை ஊக்குவிக்கும் வகையாக இந்த நிதி உதவி அபிநயா அவருக்கு வழங்கப்பட்டுள்ளது என்றும் அந்த நிதி முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்கப்பட்டுள்ளது எனவும் குறிப்பிடத்தக்கது.