காதலித்து திருமணம்! ஆசை தீர 9 மாதம் வாழ்ந்த இளசுகள்! பிறகு அரங்கேறிய விபரீத சம்பவம்!

ஆந்திர மாநிலத்தில் காதல் திருமணம் செய்து கொண்ட ஜோடி திருமணமான 9 மாதத்தில் தற்கொலை செய்து கொண்டுள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினம் அருகே உள்ள காஜிவாக பகுதியை சேர்ந்தவர் நரேந்திர குமார் 22, இவர் அப்பகுதியில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்துள்ளார். இவருக்கும் அதே நிறுவனத்தில் வேலை பார்த்து வரும் டில்லிஸ்வரி 21, என்ற பெண்ணிற்கும் இடையே பழக்கம் ஏற்பட்டுள்ளது. இருவரும் முதலில் நண்பர்களாக பழக ஆரம்பித்தார்கள். நாளடைவில் இவர்களது நட்பு காதலாக மாறியுள்ளது. இருவரும் ஒருவரை ஒருவர் காதலிக்க ஆரம்பித்தனர்.

இதையடுத்து தங்களது காதலை இருவர்களும் அவளது பெற்றோர்களிடத்தில் தெரிவித்துள்ளனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்த பெற்றோர்கள் காதலை ஒப்புக் கொள்வதாக தெரியவில்லை இதனால் மிகுந்த மன வருத்தமடைந்த காதல் ஜோடிகள் வீட்டை விட்டு ஓடி சென்று திருமணம் செய்து கொள்ள முடிவெடுத்துள்ளனர். இதையடுத்து கடந்த 9 மாதத்திற்கு முன்னர் இருவரும் வீட்டை விட்டு ஓடி சென்று திருமணம் செய்துகொண்டு தனிமையில் வசித்து வந்துள்ளனர்.

இதையடுத்து இருவரும் வேலைக்கு செல்லாததால் குடும்ப சூழ்நிலை மிகவும் மோசமானது. பொருளாதாரத்தில் மிகவும் பின்தங்கிய நிலையில் இருவரும் வசித்து வந்துள்ளனர். இதையடுத்து தங்களது குடும்ப செலவிற்காக பணம் வெளியில் வாங்கியுள்ளனர். இதையடுத்து அதை திருப்பிக் கொடுக்க முடியாததால் இருவருக்குமிடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.அதனால் இருவரும் அடிக்கடி சண்டையிட்டுக் கொண்டதாக அருகில் இருந்தவர்கள் தெரிவித்துள்ளனர்.

இதையடுத்து இருவரும் வீட்டில் தூக்கு மாட்டி தற்கொலை செய்து கொண்டுள்ளனர். சம்பவத்தை அறிந்த அருகிலிருந்தவர்கள் உடனே காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர் இறந்த உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.

மேலும் இந்த தற்கொலை சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். தற்கொலைக்கான காரணங்கள் குறித்து அருகில் இருந்தவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தி வந்தனர். மேலும் காதல் ஜோடிகளின் பெற்றோர்களையும் காவல் துறையினர் விசாரித்து வருகின்றனர்.