9 மாத குழந்தை மரணிக்கும் தருணம் வந்துவிட்டது..! கைவிரித்த ஹாஸ்பிடல்! கலங்கிய பெற்றோர்..! ஆனால்..?

பிறந்து 9 மாதங்களே ஆன கைக்குழந்தைக்கு உயிர் காக்கும் சிகிச்சையை தொடரும்படி டெக்சாஸ் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.


டெக்சாஸ் மாகாணத்தைச் சேர்ந்தவர் ட்ரினிட்டி. இவருக்கு 9 மாதங்கள் முன்பாக, பெண் குழந்தை  ஒன்று பிறந்தது. ஆனால், அந்த குழந்தை உடல்பாகங்கள் சரியாக வளராத நிலையில் குறை மாதத்தில் பிறந்ததாகக் கூறப்படுகிறது. இதுதவிர, அக்குழந்தைக்கு Ebstein's anomaly எனும் அரிய வகை இதய நோய் உள்ளது. மற்றவர்களைப் போல இல்லாமல், குழந்தையின் இதயப் பணிகள் முற்றிலும் தலைகீழான வகையில் செயல்படுவதால், எந்நேரமும் வென்டிலேட்டரில் வைத்து சிகிச்சை தர வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. 

பிறந்தது முதலாகவே, கடந்த 9 மாதங்களாக, உயிர் காக்கும் சிகிச்சை பெற்று வரும் குழந்தைக்கு, குழாய் வழியாக திரவ உணவு செலுத்தப்படுகிறது. இதுவரை 20க்கும் அதிகமான மருத்துவமனைகளில் கேட்டும் குழந்தைக்கு உரிய சிகிச்சை அளிக்க முடியாது என கைவிரித்துவிட்டனர்.  

அதேசமயம் தற்போது அனுமதிக்கப்பட்டுள்ள குக் சில்டரன்ஸ் மெடிக்கல் சென்டர் மருத்துவமனையில் இருந்தும் குழந்தையை வெளியேற்ற தீர்மானித்துள்ளனர். இதையடுத்து, குழந்தையின் பெற்றோர் டெக்சாஸ் மாகாண நீதிமன்றத்தில் முறையீடு செய்யவே, அவர்கள் அந்த மருத்துவமனைக்கு தற்காலிக தடை விதித்துள்ளனர். அடுத்த 10 நாட்களில் வேறொரு பராமரிப்பு மையத்தை தேர்வு செய்தபின் குழந்தையின் பெற்றோரே டிஸ்சார்ஜ் செய்துகொள்வார்கள், அதுவரையிலும் தேவையான மருத்துவ உதவியை வழங்கும்படி மருத்துவமனை நிர்வாகத்திற்கு உத்தரவிடப்பட்டுள்ளது.