நர்ஸ் போட்ட விபரீத ஊசி! துடிதுடித்த 9 மாத கர்ப்பிணி! பிறகு நேர்ந்த கொடூரம்! பதற வைக்கும் சம்பவம்!

9 மாத கர்ப்பிணி பெண் ஒருவருக்கு தவறான ஊசியை ஏற்றியதால் அந்த பெண் உயிரிழந்த சம்பவமானது தர்மபுரி மாவட்டத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


தர்மபுரி மாவட்டத்தில் குமாரசாமிபேட்டை என்னும் பகுதி அமைந்துள்ளது. இங்கு ஸ்ரீதர் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு அபிராமி என்ற பெண்ணுடன் 10 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. இந்நிலையில் கடந்த ஆண்டு ஜூலை மாதம் அபிராமி கருத்தரித்ததாக கூறப்படுகிறது.

9 மாத கர்ப்பிணியாக இருந்தபோது அதே பகுதியில் உள்ள ஸ்ரீ அன்னை மருத்துவமனையில் மகப்பேறுக்காக அனுமதிக்கப்பட்டிருந்தார். அங்கு பணியாற்றி வந்த மருத்துவர்களின் அறிவுரைப்படி செவிலியர்கள் ஊசியொன்றை உடம்பில் ஏற்றியுள்ளனர். 

ஊசி போட்ட உடன் அபிராமிக்கு வலிமையான வலிப்பு ஏற்பட்டது. அவரை அங்கிருந்து அரசு மருத்துவமனைக்கு அவசர அவசரமாக மருத்துவமனை நிர்வாகத்தினர் அனுப்பி வைத்துள்ளனர்.

எதிர்பாராவிதமாக செல்லும் வழியிலேயே அபிராமி உயிரிழந்துவிட்டதாக அரசு பொது மருத்துவமனை மருத்துவர்கள் கூறிவிட்டனர். சடலத்தை வாங்க மறுத்து தனியார் மருத்துவமனையின் முன் அபிராமியின் உறவினர்கள் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். 

தகவலறிந்த தர்மபுரி காவல்துறையினர் அந்த ஆஸ்பத்திரி வளாகத்திற்கு விரைந்து வந்தனர். அங்கு உறவினர்களிடம் விசாரித்தபோது, மருத்துவமனை நிர்வாகம் தங்களுக்கு பல லட்சம் ரூபாய் கொடுப்பதாக பேரம் பேசியுள்ளனர் என்றும் தகுந்த நடவடிக்கை எடுக்காவிடில் மறியல் போராட்டம் வலுக்கும் என்றும் எச்சரித்துள்ளனர். 

முறையாக விசாரித்து தக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று காவல் துறையினர் நம்பிக்கை அளித்த பின்னர் அவரின் உடலை வாங்க உறவினர்கள் கலைந்தனர்.

இந்த சம்பவமானது தர்மபுரியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.