ஒரே கிணற்றில் மிதந்த ஒரே குடும்பத்தின் 9 பேரின் சடலங்கள்..! சாப்பாட்டில் மயக்க மருந்து! பிறகு ஒருவர் பின் ஒருவராக..! பதற வைத்த மருமகனின் செயல்!

9 புலம்பெயர் தொழிலாளிகள் பாழுங்கிணற்றில் விழுந்து தற்கொலை செய்து கொண்டதாக கருதப்பட்ட நிலையில் அவர்கள் கொலை செய்யப்பட்டதாக கண்டறியப்பட்டிருப்பது தெலங்கானா மாநிலத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


தெலங்கானா மாநிலத்தில் வாராங்கல் என்று புறநகர் பகுதி அமைந்துள்ளது. இதற்கு உட்பட்ட கிசுகொண்டா காவல்நிலையத்தின் கட்டுப்பாட்டிற்குள் ஒரு பாழுங்கிணறு அமைந்துள்ளது. நேற்று இரவு இந்த கிணற்றுக்குள் 5 புலம்பெயர் தொழிலாளிகள் விழுந்து தற்கொலை செய்து கொண்டனர் .

இதுகுறித்து அப்பகுதி காவல்நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவலறிந்து விரைந்து வந்த காவல்துறையினர் தீயணைப்பு படை வீரர்கள் உதவியுடன் 5 பேரின் சடலங்களையும் வெளியே எடுத்தனர். பின்னர் அவர்களின் சடலங்களை பிரேத பரிசோதனைக்காக அருகில் உள்ள மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்நிலையில் இன்று அதிகாலை மேலும் 4 புலம்பெயர் தொழிலாளர்கள் கிணற்றுக்குள் மீண்டும் விழுந்து தற்கொலை செய்து கொண்டதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்தது.

மீண்டும் தீயணைப்பு படை வீரர்களுடன் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று மீட்பு பணியில் ஈடுபட்டனர். 4 பேரின் சடலங்களையும் வெளியே எடுத்து பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். தற்கொலை செய்து கொண்ட 9 பேரில் 6 பேர் ஒரே குடும்பத்தை சேர்ந்தவர்கள் என்று கூறப்படுகிறது. இவர்கள் அனைவரும் மேற்கு வங்காளம், பீகார் அது மாநிலங்களை சேர்ந்தவர்கள் என்பதும் தெரியவந்துள்ளது. 

இவர்கள் உடம்புகளில் எந்தவித காயங்களும் இல்லாத காரணத்தினால் தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என்று காவல்துறையினர் கருதுகின்றனர். அதுமட்டுமின்றி கிணற்றுப்பகுதிக்கு அருகேயுள்ள கிராமத்தில் கோணிப்பை தொழிற்சாலை இயங்கி வருவதாக கூறப்படுகிறது. சந்தோஷ் என்பவர்தான் இந்த தொழிற்சாலையை நடத்தி வருகிறார். 

இங்கு மேற்குவங்க மாநிலத்தை சேர்ந்த மசூத் என்பவரும் வேலை பார்த்து வந்துள்ளார். ஊரடங்கு காலத்தினால் இவர் தங்கியிருந்த வீட்டிற்கு வாடகை தர இயலவில்லை. இதனால் சந்தோஷ் தன்னுடைய குடோனில் மசூத் குடும்பத்தினரை தங்க வைத்திருந்தார். 2 நாட்களாக மசூத் மற்றும் அவருடைய குடும்பத்தினரே காணவில்லை என்று சந்தோஷ் காவல் நிலையத்தில் ஏற்கனவே புகார் அளித்திருந்ததும் தெரியவந்துள்ளது. இவர்கள் அதே கோணிப்பை தொழிற்சாலையில் கிட்டத்தட்ட இருபது ஆண்டுகளாக பணியாற்றி வந்தனர் என்று சந்தோஷ் கூறியுள்ளார். 

காவல்துறையினர் சந்தோஷின் வாக்குமூலத்தை பெற்று தொடர்ந்து தீவிர விசாரணையில் ஈடுபட்டனர். இந்த சம்பவமானது தெலங்கானா மாநிலத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

காவல்துறையினர் நடத்திய விசாரணையில் பல திடுக்கிடும் உண்மைகள் வெளியாயின. தற்கொலை செய்துகொண்ட 9 பேரில், 6 பேர் மேற்குவங்காளத்தை சேர்ந்த ஒரே குடும்பத்தை சேர்ந்தவர்கள் என்று கூறப்படுகிறது. மசூத் ஆலம், அவரது மனைவி நிஷா  கடந்த 20 ஆண்டுகளாக கோணிப்பை தொழிற்சாலையில் பணியாற்றி வந்தனர்.

இந்நிலையில் காவல்துறையினருக்கு பீகாரை சேர்ந்த சஞ்சய் குமார் என்பவர் மீது சந்தேகம் ஏற்பட்டுள்ளது. இவரும் அதே கோணிப்பை தொழிற்சாலையில் தான் பணியாற்றி வந்தார். அவரிடம் துருவித்துருவி விசாரணை நடத்தியதில் பல திடுக்கிடும் உண்மைகள் வெளியாகின. அதாவது டெல்லியில் வசித்து வரும் மசூத்தின் மருமகன் கொடுத்த அறிவுரையின்படி சஞ்சய்குமார் தன்னுடைய நண்பர்களுடன் இணைந்து 9 தேரின் உணவிலும் மயக்க மருந்து கலந்துள்ளார்.

அவர்கள் மயங்கி விழுந்த பிறகு ஒவ்வொருத்தராக கிணற்றில் தள்ளிவிட்டதாக காவல்துறையினரிடம் சஞ்சய்குமார் கூறியுள்ளார். வாக்குமூலத்தை பெற்றுக்கொண்ட காவல்துறையினர் மசூத் ஆலமின் மருமகனை விசாரிப்பதற்கு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர்.

இந்த செய்தியானது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.