ஒரே ஹாஸ்பிடல்! 9 நர்ஸ்கள்! ஒரே நாளில் பிரசவம்! 9 அழகிய குழந்தைகள்! மெடிக்கல் மிராக்கிள்!

போர்ட்லாந்து: ஒரே ஹாஸ்பிடலில் ஒன்றாக பணிபுரிந்த 9 நர்ஸ்களுக்கு ஒரே காலக்கட்டத்தில் பிரசவம் நிகழ்ந்த சம்பவம் வியப்பை ஏற்படுத்தியுள்ளது.


அமெரிக்காவில் உள்ள போர்ட்லாந்து பகுதியில் இயங்கும் மெயின் மருத்துவமனையில், மகப்பேறு பிரிவில், நர்ஸ் வேலை செய்து வரும் 9 பெண்களும், சொல்லி வைத்தாற்போல, சில நாள் இடைவெளியில் அடுத்தடுத்து கர்ப்பம் தரித்தனர். இந்த 9 பேரும் ஒருவரை விட்டு ஒருவர் பிரியாமல் நர்ஸ் வேலையை செய்துகொண்டே, தங்களுக்கும் அவ்வப்போது பரிசோதனை செய்து, கருவை வளர்த்து வந்துள்ளனர்.

5 மாதங்களுக்கு முன்பாக, இவர்கள் அனைவரும் கர்ப்பமான வயிற்றுடன், ஒரே நிறத்தில் உடை அணிந்து அதனை புகைப்படம் பிடித்து, சமூக வலைதளத்தில் வெளியிட்டு, பலரது கவனம் ஈர்த்தனர்.  இந்நிலையில், சமீபத்தில், சில வார இடைவெளியில் இவர்கள் அனைவருக்கும் பிரசவம் நடந்துள்ளது.

இதுபற்றி கேள்விப்பட்ட,  கார்லி முர்ரே (Carly Murray)என்பவர்  9 பேரையும், அவர்களின் குழந்தைகளுடன் ஒன்று சேர்த்து புகைப்படமாக எடுத்து, இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளார். அத்துடன், அந்த 9 குழந்தைகளையும் வட்ட வடிவில் அருகருகே படுக்க வைத்து அதையும் அவர் புகைப்படம் எடுத்து, பகிர்ந்துள்ளார். 

இந்த குழந்தைகளின் தாயார் அனைவரும் போர்ட்லாந்தில் உள்ள மெயின் மருத்துவமனையில் மகப்பேறு பிரிவில் நர்ஸாகப் பணிபுரிகிறார்கள். தாய்மையின் அடையாளமாக இந்த புகைப்படங்களை பார்க்கிறேன், என்று கூறி கார்லி முர்ரே கமெண்ட் பகிர்ந்துள்ளார். தற்போது, இந்த புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாக தொடங்கியுள்ளன.