புகழ்பெற்ற காமெடி, குணச்சித்திர நடிகர் டைப்பிஸ்ட் கோபு காலமானார்!

நகைச்சுவை நடிகர் நாகேஷ், இயக்குனர் கே.பாலச்சந்தர் ஆகியோரது படங்களில் நடித்த நடிகர் டைப்பிஸ்ட் கோபு காலமானார்.


ஆரம்பகாலத்தில் மறைந்த பிரபல நடிகர் நாகேஷுடன் இணைந்து பல நாடகங்களில் நடித்தவர் கோபு. நெஞ்சே நீ வாழ்க என்ற படத்தில் இவர் டைப்பிஸ்டாக நடித்திருந்தார். இதன் காரணமாகவே இவருக்கு டைப்பிஸ்ட் கோபு என்ற பெயர் வந்தது. திருச்சியில் பிறந்த இவர் கே.பாலச்சந்தரின் நாணல் என்ற திரைப்படத்தில் நடித்தார். பல முழு நீள படங்களிலும் இவர் நடித்திருக்கிறார்.

பிரத்தியேகமான நடிப்பு மற்றும் குரல் வளம் காரணமாக பிரபலமாக அறியப்பட்டார். மறைந்த அரசியல் நிபுணர் மற்றும் நடிகரான சோ ராமசாமி மற்றும் ஒய்ஜி மகேந்திரன் ஆகியோரது நாடக குழுவிலும் இவர் இடம்பெற்றிருந்தார்‌. சென்னை அயப்பாக்கம் அரசு பள்ளி அருகே இவரது வீடு உள்ளது. 85 வயதான இவர், கடந்த சில நாட்களாக உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருந்தார்.

இந்த நிலையில் டைப்பிஸ்ட் கோபு, புதன்கிழமை அன்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இவரது உடல் வியாழனன்று காலை 11 30 மணியளவில் நல்லடக்கம் செய்யப்படுகிறது. இவரது ரசிகர்கள் 9941895736 எண்ணில் தொடர்பு கொண்டு இரங்கல்களை தெரிவிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.