மீசை கூட வளரல..! 81 வயது பாட்டியுடன் கல்யாணம்! 24 வயது இளைஞரின் விபரீத முடிவு! பதற வைக்கும் காரணம்!

கட்டாய ராணுவ சேவையில் இருந்து தப்பிப்பதற்காக 81 வயது மூதாட்டியை 24 வயது இளைஞர் திருமணம் செய்துள்ளது உக்ரைன் நாட்டில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


உக்ரைன் நாட்டில் கட்டாய ராணுவ சேவை என்ற கொள்கை பின்பற்றப்பட்டு வருகிறது. ஆனால் இந்த உத்தரவிலும் சில விதிவிலக்குகளை அரசானது பின்பற்றி வருகிறது. மனைவி ஊனமுற்றவராக இருப்போருக்கு இந்த சட்டத்திலிருந்து விதிவிலக்கு கொடுக்கப்படுகிறது. ஆனால், கணவன்-மனைவி இருவருக்கும் பொதுவாக ஒரு குடியிருப்பு இல்லை என்றாலும், உரிய ஆவணங்கள் இல்லையென்றாலும் அவர்களை மீண்டும் கட்டாய சேவைக்கு திருப்பி அழைப்பர்.

இதனையறிந்த அலெக்சாண்டர் என்ற 24 வயது போர் வீரர் 81 வயது மூதாட்டியான லினிடா என்பவரை திருமணம் செய்து கொண்டார். பேகோவா என்ற கிராமத்தில் உள்ளூர் மக்களை சாட்சியாக வைத்துக்கொண்டு இந்த திருமணம் நடைபெற்றுள்ளது. 

மேலும் 81 வயது மூதாட்டியை அலெக்சாண்டர் மிகவும் அக்கறையாக கவனித்து வருவதாக அந்த கிராம மக்கள் கூறியுள்ளனர். ஆவணங்களை சரிபார்த்து அரசாங்கம் அலெக்சாண்டரை மீண்டும் கட்டாய சேவைக்கு வரவேண்டாம் என்று கூறியுள்ளனர். மேலும் எப்போது வேண்டுமென்றாலும் அவருடைய மனைவியை பார்ப்பதற்கு செல்லலாம் என்ற சலுகையை அளித்துள்ளனர். 

இந்த சம்பவமானது உக்ரைன் நாட்டில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.