பிகில் ரூ.80 கோடி! நே.கொ.பா ரூ.60 கோடி! அஜித்தை அடித்து தூக்கிய விஜய்!

பிகில் திரைப்படத்தின் தமிழக விநியோக உரிமை சுமார் 80 கோடி ரூபாய்க்கு விற்பனையாகியுள்ள நிலையில் அஜித்தின் நோர் கொண்ட பார்வை ரூ.50 கோடி வரை மட்டுமே பேசப்படுகிறது.


அட்லி இயக்கத்தில் விஜய் நடித்து வரும் பிகில் தீபாவளிக்கு வெளியாக உள்ளது. படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் பிகில் படத்தின் தமிழக உரிமை, வெளிநாட்டு உரிமை, இந்தி உரிமை, தெலுங்கு உரிமை, கேரள உரிமை, கன்னட உரிமை சுடச்சுட விற்பனையாகியுள்ளது.

படத்தின் தொலைக்காட்சி உரிமையும் கூட விற்பனையாகிவிட்டது. அந்த வகையில் பிகில் படத்தை தமிழகத்தில் ரிலீஸ் செய்யும் உரிமையை ஸ்க்ரீன் ஸீன் நிறுவனம் கையகப்படுத்தியுள்ளது. இதற்காக சுமார் 80 கோடி ரூபாயை படத்தை தயாரிக்கும் ஏஜிஎஸ் நிறுவனத்திற்கு ஸ்க்ரீன் ஸீன் நிறுவனம் தர வேண்டியுள்ளது.

முதற்கட்டமாக 30 கோடி ரூபாய் முன்பணத்தை ஏஜிஎஸ் பெற்றுள்ளது. இதன் மூலமாக பிகில் படத்தை ஸ்க்ரீன் ஸீன் நிறுவனம் தமிழகத்தில் விநியோகம் செய்ய உள்ளது. தமிழகத்தில் மட்டும் பிகில் படத்தை 100 கோடி ரூபாய்க்கு ஏரியா வாரியாக விற்பனை செய்ய முயற்சிகள் நடைபெற்று வருகிறது. 

இதே போல் பிகில் படத்தின் வெளிநாட்டு உரிமையை ஜென் ஸ்டூடியோ, யுனைடெட் எக்ஸ்போர்ட் உள்ளிட்ட நிறுவனங்கள் கையகப்படுத்தியுள்ளன. இதற்காக சுமார் 30 கோடி ரூபாய் வரை ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது. 

பிகில் படத்தின் சாட்டிலைட் உரிமையை மட்டும் சுமார் 30 கோடி ரூபாய்க்கு விற்பனையாகியுள்ளது. தமிழ், தெலுங்கு, மலையாளத்தில் பிகில் படத்தை ஒளிபரப்பு சன்டிவி உரிமையை பெற்றுள்ளது. இது தவிர இந்தியில் பிகில் ஒளிபரப்பு உரிமம் குறித்து பேசப்பட்டு வருகிறது. இந்தியில் சுமார் 10 கோடி ரூபாய் வரை பிகில் டிவி ரைட்ஸ் விற்பனையாகும் என்கிறார்கள்.

இந்தியில் பிகில் படத்தை டப் செய்து வெளியிட திட்டமிட்டுள்ளார்கள். இதன் மூலம் ஒரு 15 கோடி ரூபாய் வரை படம் கூடுதலாக விற்பனையாகும் என்று ஏஜிஎஸ் திட்டமிட்டுள்ளது. அதே சமயம் விரைவில் வெளியாக உள்ள அஜித்தின் நேர்கொண்ட பார்வை படம் தற்போது வரை விற்பனையாகவில்லை.

விஜயின் பிகில் படத்தை வாங்கிய ஸ்க்ரீன் ஸீன் நிறுவனம் தான் அஜித்தின் நேர்கொண்ட பார்வை படத்தை விலை பேசி வருகிறது. தயாரிப்பாளர் போனி கபூர் 60 கோடி ரூபாய்க்கு படத்தை விற்க முன்வந்துள்ளதாக கூறுகிறார்கள். ஆனால் படம் கோர்ட் ரூம் டிராமா என்பதால் 50 கோடி ரூபாய் வரை கொடுக்க சில நிறுவனங்கள் முன்வந்துள்ளதாக சொல்கிறார்கள். 

படம் வெளியாக இன்னும் சில நாட்களே உள்ள நிலையில் நேர்கொண்ட பார்வையின் தமிழக உரிமை 50 கோடி ரூபாய்க்கு விற்பனை ஆனாலே பெரிது என்கிறார்கள். அதே சமயம் விஜயின் பிகில் படம் வெளியாவதற்கு முன்னரே சுமார் 200 கோடி ரூபாய் வரை பிசினஸ் செய்துள்ளது.