அப்பாவ பார்க்கப் போறேன்னு சொல்லிட்டு போனா..! ஆடைகள் களைந்து காயங்களுடன் சடலமாக மீட்கப்பட்ட 8 வயது சிறுமி! சிவகாசி பயங்கரம்!

8 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்யப்பட்ட சம்பவம் விருதுநகர் மாவட்டத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது


விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே கொங்கலாபுரம் கிராமத்தைச் சேர்ந்த கட்டிட தொழிலாளியின் மகள், அதே பகுதியில் உள்ள பள்ளியில் 3-ம் வகுப்பு படித்து வந்தாள். இந்நிலையில் நேற்று பள்ளி முடிந்து சிறுமி வீட்டிற்கு வரவில்லை. இதனால் வேதனை அடைந்த பெற்றோர் மற்றும் உறவினர்கள் சிறுமியை தேடி உறவினர்கள், நண்பர்கள் வீட்டிற்கு சென்றனர்.

ஆனால் கிடைக்கவில்லை. எங்கு தேடியும் சிறுமி கிடைக்காத நிலையில சிவகாசி நகர காவல்நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. புகாரை ஏற்றுக்கொண்டு வழக்குப்பதிவு செய்த போலீசார் சிறுமியை தேடி வந்தனர். இதற்கிடையே சித்துராஜபுரம் காட்டுப்பகுதியில் ஒரு சிறுமி சடலமாக இருப்பதாக இன்று காலை போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் அங்கு சடலமாக இருந்தது மாயமான சிறுமி என்பதை ஊர்ஜிதப்படுத்தினர். சிறுமியின் உடலில் காயங்கள் இருந்ததால், மர்மநபர்களால் சிறுமி கொடூரமாக பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டுள்ளதை கண்டறிந்தனர். இதையடுத்து சிறுமியின் உடல் கைப்பற்றப்பட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

8 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொடூரமாக கொல்லப்பட்ட சம்பவம் விருதுநகர் மாவட்டத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. டெல்லியில் ஒரு பெண்ணிற்கு கொடுமை நடந்தால் நாடே கொந்தளிக்கிறது. இதுபோன்று கூலித்தொழிலாளியின் மகள் பாதிக்கப்படும்போது சாதாரண செய்தியாக கடந்து சென்றுவிடுகிறது.