லிவிங் டுகெதர் தம்பதி! ஆண் திடீர் மரணத்தால் பெண்ணுக்கு நேர்ந்த கொடுமை!

திருமணம் செய்யாதிருந்த பெண், தன் கணவன் இறந்த பிறகு படும் சிரமங்கள் பிரிட்டன் நாட்டில் அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.


பாலோ என்பவர் பிரிட்டன் நாட்டை சேர்ந்தவர். இவர் 8 ஆண்டுகளுக்கு முன்னர் லவேரி என்ற காதலித்தார். லவேரியை திருமணம் செய்யாமல் "லிவ்விங் டு கெதர்" என்னும் முறையில் வாழ்ந்து வந்தனர். இத்தம்பதியினருக்கு ஜான் என்ற மகன் உள்ளார்.

பாலு வெளி மாநிலத்தில் வேலை புரிந்து வந்தார். வார இறுதி நாட்களில் மட்டும் தன் மனைவி மற்றும் மகனை காண்பதற்கு வீட்டிற்கு வருவார். சென்ற மாதத்தில் பாலோ ஒரு வாரம் வீட்டுப்பக்கமே வரவில்லை. இதனால் லவேரி மிகவும் பயந்து போனார். பாலோவின் அலுவலகத்திற்கு சென்று விசாரித்தபோது அவர் அங்கேயும் வரவில்லை என்று அறிந்துள்ளார். பின்னால் பாலோ அலுவலகத்திற்கு அருகில் தங்கியிருந்த வீட்டிற்கு சென்ற போது அவர் இறந்து கிடந்ததை கண்டு அதிர்ந்துள்ளார்.

கணவரை இழந்த சோகத்தை கட்டுப்படுத்த இயலாமல் உறவினர்களிடம் தெரிவித்து அவரின் உடலை அடக்கம் செய்தார். ஆனால் அதன் பின்னரே லவேரிக்கு மிகவும் கஷ்டமான காலம் தொடங்கியது.

தன் கணவரின் பெயரில் உள்ள சொத்துக்களை அவரால் அனுபவிக்க இயலவில்லை. இவர் தான் பாலோவின் மனைவி என்பதற்கு எந்தவித ஆதாரமும் இல்லை. தங்கள் மகனின் பிறப்பு சான்றிதழில் கணவன் மனைவி இருவரின் பெயரும் இருந்தாலும், லவேரியால் பாலோவின் மனைவி என்று நிரூபிக்க இயலவில்லை.

பாலோவின் சொத்துக்கள் அனைத்தும் முடக்கம் செய்யப்பட்டுள்ளன. மேலும் விதவைக்கான சலுகைகளை கூட லவேரியால் பெற இயலவில்லை. இதனால் அவர் மிகவும் மனமுடைந்து கிடக்கிறார்.திருமணமாகாமல் "லிவிங் டு கெதர்" முறையில் வாழும் அனைவருக்கும் இந்த நிகழ்வு தக்க பாடத்தை புகட்டியுள்ளது.