32 வயதில் துவங்கிய தகாத உறவு! 40 வயதில் ஏற்பட்ட பயங்கரம்! பெண்மணி எலும்புக் கூடாக மீட்கப்பட்டதன் பகீர் பின்னணி!

கள்ளக்காதலில் ஈடுபட்ட வந்த பெண் காதலனால் கொலை செய்யப்பட்ட சம்பவமானது ராமநாதபுரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


ராமநாதபுரம் மாவட்டத்தில் திருவாடானை எனும் இடம் அமைந்துள்ளது. இங்குள்ள சீர்தாங்கி என்னும் கிராமத்தில் அமலசெல்வி என்ற 40 வயது பெண் வசித்து வந்துள்ளார். இவருக்கு ஏற்கனவே திருமணமாகிவிட்டது. இந்நிலையில் திடீரென்று நவம்பர் மாதம் 8-ஆம் தேதியன்று காணாமல் போயுள்ளார். அவருடைய உறவினர்கள் அப்பகுதி காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.

புகாரை பெற்றுக்கொண்ட காவல்துறையினர் விசாரணையை தொடங்கினர். விசாரணையில் பல திடுக்கிடும் உண்மைகள் வெளியாகியுள்ளன. காவல்துறையினர் அமலசெல்வியின் செல்போன் அழைப்புகளை பரிசோதித்தனர். அவர் சித்தானூர் பகுதியில் உள்ள சமத்துவபுரம் என்ற இடத்தை சேர்ந்த கண்ணன் என்பவருடன் அடிக்கடி பேசி வந்தது தெரியவந்துள்ளது. உடனடியாக கண்ணனிடம் காவல்துறையினர் விசாரணை நடத்தினர்.

விசாரணையில் பல திடுக்கிடும் உண்மைகள் வெளியாகின. அதாவது, கண்ணனும் அமலச்செல்வியும் கடந்த 8 ஆண்டுகளாக கள்ளக்காதலில் ஈடுபட்டு வந்துள்ளனர். ஆனால் சுமார் ஒன்றரை வருடங்களுக்கு முன்னர் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டு பிரிந்துள்ளனர்.

இதனால் கண்ணன் பெரும் ஆத்திரம் அடைந்துள்ளார்.  அமலசெல்வியை கொலை செய்ய வேண்டும் என்று கண்ணன் திட்டமிட்டுள்ளார். அதன்படி சம்பவத்தன்று தேவகோட்டைக்கு வருமாறு கண்ணன் அமலசெல்வியை அழைத்துள்ளார். இருவரும் இறுதியாக ஒரு முறை உல்லாசமாக இருப்பதற்காக காட்டுப்பகுதிக்குள் சென்றுள்ளனர்.

அப்போது கண்ணன் அமலசெல்வியை கழுத்தை நெரித்து கொலை செய்துள்ளார். பின்னர் அவருடைய உடலை அங்கேயே போட்டு விட்டு தப்பி சென்றுள்ளார். கண்ணன் கூறிய இடத்திற்கு சென்ற காவல்துறையினர் பல மண்டைஓடுகள், எலும்புகள் ஆகியவற்றை பறிமுதல் செய்துள்ளனர். உடனடியாக அவற்றை பரிசோதிப்பதற்காக ஆராய்ச்சி மையத்திற்கு அனுப்பி வைத்துள்ளனர்.

இந்த சம்பவமானது ராமநாதபுரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.