8 வயதில் 108 மொழிகள்! அசத்தும் சென்னை சிறுவன்! யார் தெரியுமா?

சென்னையை சேர்ந்த 8 வயது சிறுவன் தானாக முயன்று சொந்த முயற்சியில் 100க்கும் மேற்பட்ட மொழிகளை கற்று கொண்டு பேசுவது பார்ப்பவர்களை மிரள வைக்கிறது.


சென்னை யை சேர்ந்த  சங்கர் நாராயணன் இவரது மகன் நியால் தொகுலுவா, 8 வயதான நியால் தனது சொந்த முயற்சியினால்  பிற மொழிகளை கற்க ஆர்வம் காட்டியுள்ளார், இணையத்தள உதவியுடன், பிற மொழிகளை கற்றுக்கொள்ள ஆர்வம் காட்டிய நியால், காலபோக்கில் தனது பொற்றோருக்கு பிற மொழிகளை எழுதி படிக்கவும் சொல்லிதரும் அளவிற்க்கு திறன் வாய்ந்திருப்பதாக  பெருமிதம் கொள்கிறார் , தந்தை சங்கர்.

மேலும் சர்வதேச அளவில் (IPA) மற்ற மொழிகளை மொழிபெயர்த்து கொள்ள உதவும் நுட்பமான கலைகளையும் அறிந்து வைத்துள்ளார். பொதுவாக தாய் மொழியை தவறில்லாமல் பேச எழுதவே திணரும் சந்ததியர் மத்தியில் பல மொழிகளை ஆக்கிரமித்து அசத்தி வரும் நியாலுக்கு சமூக வலைதளங்களில் பாராட்டுகள் குவிந்து வருகின்றன

இவனிடம் ஒரே ஒரு கேள்வி கேட்டால் போதும், அந்த கேள்விக்கு 108 மொழிகளில் பதில் அளித்து அசத்துகிறார். இதே போல் சரளமாக பல்வேறு மொழிகளில் பேசுகிறார். இவரது மொழிப் புலமையை பார்த்து அந்த மொழிகளில் நிபுணர்களாக இருப்பவர்களும் வியக்கிறார்கள்.