திடீரென பழுதாகி நடுரோட்டில் நின்ற கார்! அதிவேகத்தில் வந்த டிரக்! நொடியில் தாய் கண் முன் மகனுக்கு நேர்ந்த பயங்கரம்!

ஸ்மார்ட் சாலைகள் வேண்டாமென்று இந்திய வம்சாவளி பெண்ணொருவர் பிரிட்டன் அரசாங்கத்திடம் முறையிட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


பிரிட்டன் நாட்டின் பர்மிங்ஹாம் நகரில் ஸ்மார்ட் சாலைகள் அமைந்துள்ளன. பர்மிங்ஹாம் நகரில் ஒரு இந்திய வம்சாவளி குடும்பத்தினர் வசித்து வந்தனர். இந்த குடும்பத்தில் தேவ் என்ற 8 வயது சிறுவன் வசித்து வந்துள்ளான். 

இவன் தன்னுடைய தாத்தாவுடன் காரில் பர்மிங்காம் நகரின் ஸ்மார்ட் சாலையில் சென்றுள்ளான். அப்போது எதிர்பாராவிதமாக கார் பழுதடைந்துள்ளது. நெடுஞ்சாலையில் இருந்த காரை பாதுகாப்பான இடத்திற்கு எடுத்து செல்வதற்காக இருவரும் முயற்சி செய்து கொண்டிருந்த போது வேகமாக வந்த ட்ரக் தேவ் மீது மோதியது. மோதிய அதிர்ச்சியில் தேவ் சம்பவயிடத்திலேயே உயிரிழந்தான்.

ஸ்மார்ட் சாலைகள் கூட்ட நெரிசலுக்கு ஏற்றவாறு வாகனங்களை அனுமதிக்கும் தன்மையுடையன. ஆபத்தான நேரங்களில் வாகனங்களை நிறுத்திக்கொள்வதற்கும் ஸ்மார்ட் சாலைகள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன‌. அவ்வாறு நிறுத்த முயற்சி செய்தபோது தான் தேவ் மீது ட்ரக் மோதியுள்ளத.

இந்த ஸ்மார்ட் சாலைகளில் இதுபோன்று 3 விபத்துகள் ஏற்பட்டுள்ளன. அகமது (36), ஜேசன் (43) மற்றும் ஜேக்கப்ஸ் (83) ஆகியோர் இந்த சாலையில் அடிபட்டு உயிரிழந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. இறந்துபோன தேவின் தாயார் கண்ணீர் மல்க ஸ்மார்ட் நெடுஞ்சாலைகளுக்கு அனுமதி வழங்க வேண்டாம் என்று பிரித்தானிய அரசிடம் முறையிட்டுள்ளார்.

இதற்கு எதிராக குரல் கொடுக்கும் நபர்கள் "புரோக்கன் ஹார்ட்ஸ்" (Broken hearts) என்ற வாட்ஸ்அப் குழுவை உபயோகித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த சம்பவமானது பிரித்தானியாவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.