வயது வெறும் 8 தான்! ஸ்ப்ளன்டர் பைக்கில் பறக்கும் சிறுவன்! ஆனால் அவன் தந்தைக்கு ஏற்பட்ட பரிதாப நிலை!

8 வயது சிறுவன் இருசக்கர வாகனம் ஓட்டிய வீடியோவானது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.


இந்தியாவில் 18 வயது நிரம்பியவர்களுக்கு வாகன ஓட்டுநர் உரிமம் அளிக்கப்பட்டு வருகிறது. ஆனால் இந்த சட்டத்தை பின்பற்றாமல் பலரும் இளம் வயதிலேயே இருசக்கர வாகனத்தை ஓட்டுகின்றனர். பொறுமை இல்லாமலும், வாகன விதிகளை பின்பற்றாமலும் இவர்கள் ஓட்டுவதால் பொதுமக்களுக்கு மிகுந்த சிரமம் ஏற்படுகிறது.

புதிய மோட்டார் வாகன சட்டத்தில் இந்த விதி மீறலுக்கான அபராதம் 25 மடங்காக உயர்த்தப்பட்டுள்ளது. 500 ரூபாய் அபராதம் தற்போது 25,000 ரூபாயாக மாறியுள்ளது. 

சமீபத்தில் மிகவும் இளம் வயது சிறுவன் இருசக்கர வாகனத்தை ஓட்டிச் செல்வது போன்ற வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இந்த வீடியோவிற்கு எதிராக கடும் கண்டனங்கள் தெரிவிக்கப்பட்டன. சிறுவனின் தலைக்கும், தலைக்கவசத்திற்கும் சுத்தமாக பொருத்தமில்லை.

விசாரணை நடத்தியதில், உத்திரபிரதேச மாநிலத்தின் தலைநகரான லக்னோவில் இந்த சம்பவம் நிகழ்ந்ததை அதிகாரிகள் கண்டறிந்தனர். அப்பகுதியில் உள்ள ககோரி காவல் நிலையத்திற்கு உட்பட்ட பகுதியில் இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது.

உடனடியாக காவல்துறையினர் சம்பந்தப்பட்ட சிறுவனின் தந்தைக்கு 30,000 ரூபாய் அபராதம் விதித்தனர். இந்த வீடியோவானது பலருக்கும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.