வீட்டை சுற்றி சாக்கடை..! சுத்தமாக வைத்திருக்காததால் 8 வயது அக்சிதாவுக்கு நேர்ந்த பரிதாப முடிவு! கதறும் பெற்றோர்!

டெங்கு காய்ச்சலில் அவதிப்பட்டு வந்த 8 வயது சிறுமி இறந்துள்ள சம்பவம் ஆனது சென்னையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


சென்னையில் பரபரப்பாக காணப்படும் சாலையில் பெரியமேடு-ஸ்டிங்கர்ஸ் சாலையும் ஒன்றாகும். இந்த சாலை அமைந்துள்ள பகுதியில் ஆனந்த் என்பவர் வசித்து வந்தார். இவருடைய மனைவியின் பெயர் கஜலட்சுமி. இத்தம்பதியினருக்கு அக்ஷதா என்ற 7 வயது குழந்தை உள்ளது. இந்த குழந்தை அப்பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் படித்து வந்தது. இந்நிலையில் கடந்த சில நாட்களாகவே குழந்தை கடுமையான காய்ச்சலால் அவதிப்பட்டு வந்துள்ளது. இதனைத்தொடர்ந்து நேற்று எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவமனையில் சிகிச்சைக்காக குழந்தை அனுமதிக்கப்பட்டது.

குழந்தையை பரிசோதித்த மருத்துவர்கள், குழந்தைக்கு டெங்கு காய்ச்சலிருப்பதை கண்டறிந்துள்ளனர். ஒரு நாள் முழுவதும் டெங்கு காய்ச்சலை தடுப்பதற்காக சிகிச்சை கொடுக்கப்பட்டு வந்த போதிலும் எதிர்பாராவிதமாக குழந்தை இன்று மதியம் இறந்துவிட்டது. இறந்த குழந்தையை கண்ட பெற்றோர் கதறி அழுதனர். இந்த சம்பவமானது மருத்துவமனையில் அனைவரையும் கரைய வைத்தது.

இதனையடுத்து பெரியமேடு பகுதி மக்கள்தங்கள் பகுதிகளில் சரிவர துப்புரவு பணிகளை மேற்கொள்ளாததினாலும், சுகாதாரமான குடிநீர் கிடைக்காததாலும் இது போன்ற பயங்கரமான நோய்களால் தொடர்ந்து அவதிப்பட்டு வருவதாக குற்றம் சாட்டியுள்ளனர். இந்த சம்பவமானது பெரியமேடு பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.