சூதாட்டத்தில் ஈடுபட்ட 8 பெண்கள் கைது செய்யப்பட்டிருப்பது ஆந்திர மாநிலத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஆண்கள் இல்லாத வீடு! 8 குடும்ப குத்து விளக்குகள் ஒன்றாக சேர்ந்து செய்த பகீர் காரியம்! சுற்றி வளைத்த போலீஸ்! பரபரப்பு நிமிடங்கள்!

ஆந்திர மாநிலத்தில் குண்டூர் என்ற இடம் அமைந்துள்ளது. இதற்கு உட்பட்ட தாடிப்பள்ளி என்னும் கிராமத்தில் பல பெண்கள் சூதாட்டத்தில் ஈடுபட்டு வந்துள்ளனர். ரகசிய தகவலின் பேரில் காவல்துறையினர் அப்பகுதிக்கு சென்று சோதனையில் ஈடுபட்டனர். அப்போது ஒரு வீட்டில் 8 பெண்கள் சூதாட்டத்தில் ஈடுபட்டிருந்த போது, காவல்துறையினர் கையும் களவுமாக அவர்களை கைது செய்தனர்.
மேலும் அவர்களிடமிருந்த 1.36 லட்சம் ரொக்க பணத்தையும், 8 செல்போன்களையும் பறிமுதல் செய்துள்ளனர். தப்பி சென்ற 3 பெண்களையும் காவல்துறையினர் தேடி வருகின்றனர்.
இந்த சம்பவமானது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.