பாலியல் வல்லுறவு! கொடூர கொலை! மும்பையில் தமிழ் குடும்பத்துக்கு நேர்ந்த பரிதாபம்!

மும்பையில் 8 வயது தமிழ் சிறுமி பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட நபரை காவல் நிலையத்திற்கு அழைத்துச் செல்லும் வழியில் போராட்டத்தில் ஈடுபட்ட அச்சிறுமியின் உறவினர்கள் மற்றும் அப்பகுதி மக்கள் நாங்களே அவனுக்கு தண்டனை வழங்குகிறோம்.என சாலை மறியலில் ஈடுபட்டனர்.இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

கடந்த சில தினங்களுக்கு முன்பு கோவையில் நடந்த சிறுமி பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்தது போலவே தற்போது மும்பையிலும் 8 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்யப்பட்ட சம்பவம் மக்கள் மத்தியில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. இதுபோன்ற சம்பவங்கள் பெருகிவரும் நிலையில் தண்டனைகள் கடுமையாக்கப்பட வேண்டும் என போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள் தெரிவித்துள்ளனர்.

மும்பையில் வசிக்கும் தமிழ் குடும்பத்தினர் அங்குள்ள விலை பார்லா எனும் பகுதியில் நீண்டகாலமாக வசித்து வருகின்றனர் இவர்களுக்கு ஒரு பெண் குழந்தையும் உண்டு. எட்டு வயது நிரம்பிய பெண் குழந்தை அருகில் உள்ள பள்ளியில் மூன்றாம் வகுப்பு படித்து வந்துள்ளது. நேற்று பள்ளி முடிந்து வந்த நிலையில் குழந்தையின் தாயார் அருகில் உள்ள மளிகை கடைக்கு சென்று பொருட்கள் வாங்கி வரும்படி கூறியுள்ளார்.

இதனை தொடர்ந்து மளிகை கடைக்கு சென்ற குழந்தை வெகுநேரமாகியும் திரும்பி வராத நிலையில் அதிர்ச்சியடைந்த பெற்றோர் அருகில் தேடி பார்த்துள்ளனர் வெகுநேரம் ஆகியும் குழந்தை கிடைக்காததால் அருகிலுள்ள ஜூகு காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.பின்னர் அங்கு வந்த காவல்துறையினர் குழந்தையை தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர் சிறிது நேரத்துக்குப் பிறகு காவல் நிலையத்தின் அருகே உள்ள கழிப்பறையில் ஒரு குழந்தை சடலம் இருப்பதை கண்டறிந்தனர்.பின்னர் சடலத்தை கைப்பற்றி பெற்றோர்களும் காண்பித்த போது அது தன் மகள் தான் என கதறி அழுதுள்ளனர்.

இதை தொடர்ந்து குழந்தையின் சடலத்தை கைப்பற்றிய போலீசார் பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் குழந்தை பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்யப்பட்டது உறுதியானது. இதைதொடர்ந்து அப்பகுதியில் குற்றவாளியை கண்டு பிடிக்க தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளன காவல்துறையினர். பின்னர் குழந்தையை பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்த குற்றத்திற்கு காரணமாக இருந்த வடிவேலு என்பவரை கைது செய்தனர்.

அங்கு பல்வேறு கொலை கொள்ளை சம்பவங்களில் ஈடுபட்டு உள்ள வடிவேல் என்னும் குண்டப்பா என்பரை கைது செய்த போலீசார் அவரை காவல் நிலையத்திற்கு அழைத்துச் செல்லும்போது அங்கு கூடியிருந்த மக்கள் சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்தவனை தாங்களே தண்டிப்பதாக கூறி போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதோடு சாலை மறியலிலும் ஈடுபட்டனர். கைது செய்யப்பட்டுள்ள குண்டப்பா ஏற்கனவே இதுபோன்ற சம்பவங்களில் ஈடுபட்டு சிறை சென்று தற்போது ஜாமீனில் வெளி வந்துள்ளதாக தெரிகிறது. இதை தொடர்ந்து கைது செய்யப்பட்ட குண்டப்பா மீது வழக்கு பதிவு செய்து சிறையில் அடைக்கப்பட்டார். இச்சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.