அரும்பாக்கம், வேளச்சேரி, சைதாப்பேட்டை! சென்னையில் 8 பகுதிகளுக்கு திடீர் சீல்..! 50 ஆயிரம் வீடுகளில் இருந்து மக்கள் வெளியேற தடை! பரவுகிறதா கொரோனா?

கொரோனா வைரஸ் தாக்குதலினால் சென்னையில் 8 இடங்களுக்கு சீல் வைக்கப்பட்டுள்ள சம்பவமானது சென்னைவாசிகள் இடையே பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.


கடந்த சில வாரங்களாக உலகம் முழுவதையும் கொரோனா வைரஸ் ஆட்டிப்படைத்து வருகிறது. கிட்டத்தட்ட 50,000-க்கும் மேற்பட்டோர் இந்த வைரஸ் தாக்குதலினால் இதுவரை உயிரிழந்துள்ளனர். சீனா நாட்டில் தொடங்கி, இத்தாலி, வடகொரியா, இந்தியா ஆகிய நாடுகளிலும் வேகமாக பரவ தொடங்கியுள்ளது. இந்த நோயால் பாதிக்கப்பட்டவர்கள் தங்களுடைய கைகளை சுத்தம் செய்யாமல் பொருட்களை தொடுவதிலிருந்து வேகமாக பரவுவதாக கூறப்படுகிறது. 10,00,000-க்கும் மேற்பட்டோர் இந்த வைரஸால் தாக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

இந்தியா முழுவதிலும் 2300 பேருக்கு இந்த கொரோனா வைரஸ் தாக்குதல் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதுவரை 157 பேர் குணமடைந்து இருப்பதாகவும், 57 பேர் உயிரிழந்திருப்பதாகவும் கூறப்படுகிறது. தமிழ்நாட்டில் 411 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. அவர்களுள் அதிகபட்சமாக சென்னையை சேர்ந்தவர்கள் 81 பேர் இருப்பதாக கூறப்படுகிறது.

சென்னை வேளச்சேரியில் அமைந்துள்ள ஃபீனிக்ஸ் மாலில் பணியாற்றி வந்த 3 பேருக்கு இந்த நோய் தாக்குதல் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. அதனால் மார்ச் மாதம் 10 முதல் 17ஆம் தேதி வரை அங்கு சென்றோம் தாங்களாகவே முன்வந்து மாநகராட்சி அவரிடம் தெரிவிக்க வேண்டுமென்று நேற்று சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷ் கேட்டுக்கொண்டார்.

புளியந்தோப்பு, எண்ணூர், தண்டையார்பேட்டை, நேதாஜி நகர், முத்தியால்பேட்டை, புதுப்பேட்டை, புரசைவாக்கம், சைதாப்பேட்டை, வேளச்சேரி ஆகிய பகுதிகள் தீவிர கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. கொரோனா தோற்று உறுதியானவர்கள் பெரும்பாலும் இந்த இடங்களில்வசித்து வருவதால் இத்தகைய நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளதாக சென்னை மாநகராட்சி விளக்கம் அளித்துள்ளது.

அத்தியாவசிய தேவைகள் என்று இப்பகுதிகளை சேர்ந்த மக்கள் வெளியே வருவதற்கு காவல்துறையினர் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். காவல்துறை மேலதிகாரிகள் ட்ரோன் மூலம் இப்பகுதிகளில் உள்ள மக்கள் வெளியே வரவேண்டாம் என்று கேட்டுக்கொண்டுள்ளனர். இது தொழில்நுட்பத்தின் மூலம் மக்கள் வெளியே வருவதை கண்காணிக்கவும் காவல்துறையினர் முடிவெடுத்துள்ளனர்.‌

டெல்லி மாநாட்டில் கலந்துகொண்ட 4 புதுப்பேட்டையில் வசித்து வருகின்றனர். அவர்களுக்கு இந்த வைரஸ் தாக்குதல் ஏற்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. இதனால் அந்த பகுதியும் முழுவதுமாக காவல்துறையினர் கண்காணிப்பில் வந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

கடந்த ஓரிரு நாட்களாக சென்னையில் கொரோனா வைரஸ் தாக்குதல் அதிகமாகி வருவதால் மக்கள் சற்று பதற்றம் அடைந்துள்ளனர் என்று கூறினால் அது மிகையாகாது.