மனைவியிடம் தகாத முறையில் பேச்சு! 8 பேர் மீது ஆசிட் வீசிய கணவன்! அதிர வைக்கும் சம்பவம்!

குடிபோதையில் தகராறு செய்தவர்கள் மீது வெள்ளிப்பட்டறை உரிமையாளர் ஆசிட் வீசிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


சென்னை நெற்குன்றம் முனியப்பா நகரைச் சேர்ந்த கன்னியப்பன் என்பவர் வெள்ளிப்பட்டறை உரிமையாளர். இவர் பெயிண்டர் ஆன தனது மைத்துனர் பாஸ்கர் மற்றும் மனைவி ரஞ்சனி உடன் வசித்து வந்தார். இவர்கள் வசிக்கும் அதே வீட்டின் கீழ்ப்பகுதியில் அரியலூர் மாவட்டத்தைச் சேர்ந்த கருப்புசாமி வாஞ்சிநாதன், வேல்முருகன் , அசோக் உள்ளிட்ட 8 பேர் வசித்துவந்தனர்.

அரியலூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் அனைவரும் கோயம்பேடு மார்க்கெட்டில் கூலித் தொழிலாளியாக பணிபுரிந்து வருகின்றனர். இந்த நிலையில் சம்பவத்தன்று 8 பேரும் வீட்டின் மொட்டை மாடியில் இருந்து கொண்டு இருந்துள்ளனர். சத்தம் போட்டு சிரித்து பேசி அவர்கள் இடையூறு ஏற்படுத்தவே பாஸ்கரும் கன்னியப்பனும் தட்டிக் கேட்டுள்ளனர்.

இதனால் ஆத்திரமடைந்த 8 பேரும் உருட்டு கட்டைகளை எடுத்து கொண்டு இருவரையும் தாக்க முயற்சித்துள்ளனர். இதை அடுத்து தனது கணவர் கன்னியப்பன் மற்றும் சகோதரன் பாஸ்கரை வீட்டிற்குள் வைத்து ரஞ்சனி பூட்டியுள்ளார். இருப்பினும் அந்த எட்டு பேரும் விடாமல் அவதூறாக பேசியுள்ளனர். அதிலும் மனைவி ரஞ்சனி குறித்தும் ஆபாசமாக பேசியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த கன்னியப்பன் வெள்ளியை சுத்தம் செய்வதற்காக வைத்திருந்த ஆசிட்டை எடுத்து 8 பேர் மீது ஊற்றினார்.

இதில் 8 பேரின் உடலும் வெந்து போனது. இருவருக்கு கண்களில் ஆசைப்பட்டது. இருப்பினும் அனைவரும் நலமுடன் இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். கன்னியப்பனிடம் கோயம்பேடு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.