கையாள் ஆகாத கணவன்! 8 மாத கர்ப்பிணி எடுத்த விபரீத முடிவு! பதற வைக்கும் சம்பவம்!

தர்மபுரி மாவட்டத்தில் வரதட்சணை கொடுமையால் 8 மாத கர்ப்பிணி பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டுள்ள சம்பவம் அரங்கேறியுள்ளது.


தனது கணவன் வீட்டார் வரதட்சணை கேட்டு அடித்துத் துன்புறுத்தியதால் கர்ப்பிணிப் பெண் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தனியே தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார் இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தர்மபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டியை சேர்ந்தவர் பாஞ்சாலி 23 , மற்றும் தர்மபுரி மாவட்டம் கல்லாத்துப்பட்டியை சேர்ந்த சதீஷ்குமார் என்பவருக்கும் பெற்றோர்கள் முன்னிலையில் கடந்த 10 மாதங்களுக்கு முன்பு திருமணம் நடந்தது. திருமணத்தின் போது மணமகள் வீட்டார் போதிய அளவு வரதட்சணை கொடுத்து அனுப்பியுள்ளனர்.

10 மாதங்கள் நன்றாக சென்ற நிலையில் நாட்கள் செல்ல செல்ல கணவன் மனைவி இருவருக்கும் இடையில் அடிக்கடி குடும்பத் தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இந்நிலையில் பாஞ்சாலி தன் தாய் வீட்டிற்கு சென்று வந்துள்ளார். தாய் வீட்டிற்கு செல்லும் போதெல்லாம் அவரது தாய் சமாதானம் செய்து திரும்பவும் சதீஷ்குமாரின் வீட்டிற்கு அனுப்பி வைத்துள்ளார்.

கடந்த சில நாட்களுக்கு முன்பு ஏற்பட்ட குடும்ப தகராறில் ஆத்திரமடைந்த பாஞ்சாலி திரும்பவும் தன் தாய் வீட்டிற்கு வந்துள்ளார். அப்போது சதீஷ்குமார் தன்னை வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்துவதாக தன் தாயிடம் தெரிவித்து கதறி அழுதுள்ளார். இந்நிலையில் அவரை சமாதானப்படுத்திய அவரது தாய் சகுந்தலாவை மீண்டும் சதீஷ்குமாரின் வீட்டிற்குக் கொண்டுவந்து விட்டுள்ளார்.

இந்நிலையில் நேற்று கணவன் மனைவி இருவருக்கும் இடையே வாக்குவாதம் முற்றிய நிலையில் ஆத்திரமடைந்த பாஞ்சாலி வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். 

இந்நிலையில் அக்கம்பக்கத்தினர் இது குறித்து காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அவரது தாய் சகுந்தலாவிற்கும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த செய்தியை கேட்டு அதிர்ச்சி அடைந்த சகுந்தலா தன் மகள் தற்கொலை செய்து கொள்ளவில்லை அவர்கள்தான் கொலை செய்துவிட்டார்கள் என கூறி பாஞ்சாலியின் உடலை கட்டிப்பிடித்து அழுதுள்ளார்.

இதையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த பாப்பிரெட்டிப்பட்டி காவல்துறையினர் பாஞ்சாலியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தர்மபுரி மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். இதையடுத்து தனது மகளின் சாவில் சந்தேகம் இருப்பதாக சகுந்தலா போலீசாரிடம் தெரிவித்துள்ளார்.இந்நிலையில் வழக்குப்பதிவு செய்த போலீசார் தற்கொலைக்கான காரணம் குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.