9 மாத கர்ப்பிணியாக இருந்த அண்ணி..! வீட்டில் தனிமையில் இருந்த அவருக்கு மைத்துனரால் ஏற்பட்ட பயங்கரம்! அதிர்ச்சி சம்பவம்!

8 மாத கர்ப்பிணி பெண் மைத்துனரால் கொலை செய்யப்பட்டுள்ள சம்பவமானது பெங்களூருவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


கர்நாடகா மாநிலத்தின் தலைநகரான பெங்களூருவை சேர்ந்தவர் ஜோதி. இவர் 8 மாத கர்ப்பிணியாவார். இவர் தன்னுடைய புகுந்த வீட்டில் வசித்து வந்துள்ளார். ஜோதியின் கணவருடைய தம்பி என் பெயர் ஹரி. அருவி சமீபகாலமாக குடிப்பழக்கத்திற்கு அடிமையாகிவிட்டார். இதனால் வெறுப்புற்ற அவருடைய மனைவி அவரை பிரிந்து சென்றுவிட்டார்.

அப்போது இருந்து தன்னுடையகுடும்பத்தினருடன் ஹரி அவ்வப்போது வாக்குவாதங்கள் செய்து வந்துள்ளார். இந்நிலையில் நேற்று இரவு வீட்டில் ஜோதி மற்றும் ஹரி ஆகியோரை தவிர்த்து பிறர் வெளியே சென்றுவிட்டனர். அப்போது ஹரி குடித்துக்கொண்டு இருந்துள்ளார்.

ஜோதி, ஹரிக்கு அறிவுரை கூறுவதற்காக அவருடைய அறைக்கு சென்றுள்ளார். அப்போது இருவருக்குமிடையே வாக்குவாதங்கள் ஏற்பட்டுள்ளன. மதுபோதையில் இருந்த ஹரி அருகே இருந்த கத்தியை எடுத்து கர்ப்பிணிப் பெண் என்றும் பாராமல் தன்னுடைய அண்ணியை குத்தி கொலை செய்துள்ளார். 

உறவினர்கள் அனைவரும் வீடு திரும்பிய போது சுவற்றில் ரத்தம் படிந்திருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர், உள்ளே சென்று பார்த்தபோது ஜோதி சடலமாக கிடந்தார். உடனடியாக அப்பகுதி காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர் ஹரியிடம் நடத்திய விசாரணையில், தான்தான் அண்ணியை கத்தியால் குத்தி கொலை செய்ததாக ஒப்பு கொண்டுள்ளார். 

உடனடியாக காவல்துறையினர் ஹரியை கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். இந்த சம்பவமானது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.