பெண்ணின் குளியலறையில் 8 அடி நீளமுள்ள பாம்பு பதுங்கியிருந்த சம்பவமானது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
எவ்ளோ பெருசு..? 8 அடி நீளம் இருக்கும்! குளியல் அறையில் பார்க்க கூடாததை பார்த்து அலறிய பெண்!

இங்கிலாந்து நாட்டில் பிர்க்கென்ஹெட் என்ற நகரம் அமைந்துள்ளது. இந்த நகரத்தில் வசித்து வரும் பெண் ஒருவர் சில நாட்களுக்கு முன்னர் குளிப்பதற்காக தன்னுடைய குளியலறைக்கு சென்றுள்ளார்.
அப்போது குளியலறையின் குழாயை சுற்றி ஒரு பாம்பு கிடந்துள்ளது. சுமார் 8 அடி நீளமான அந்த பாம்பை கண்டு அந்த இளம்பெண் அதிர்ச்சியில் உறைந்துள்ளார். உடனடியாக சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் அந்த பெண் தகவல் தெரிவித்துள்ளார். சம்பவயிடத்திற்கு விரைந்து வந்த அதிகாரிகள் அடக்குவதற்கு கடுமையாக போராடினர். ஆனால் அவர்களால் பாம்பை பிடிக்க இயலவில்லை.
உடனடியாக பாம்பு பிடிப்பதில் வல்லவரான கிறிஸ் ஈஸ்ட்வுட் என்கிற அதிகாரியை வரவழைத்தனர். அவர் சிறிது போராட்டத்திற்கு பிறகு அந்த பாம்பை பிடித்துள்ளார். தற்போது அந்த பாம்பு தற்காலிகமாக உள்ளூர் செல்லப்பிராணிகள் முகாமில் கொண்டு விடப்பட்டுள்ளது.
அந்த பாம்பு "போ கண்ஸ்ட்ரிக்டர்" வகையை சார்ந்தது என்றும் விஷத்தன்மை அற்றது என்றும் கூறப்படுகிறது. வெப்பசலனம் மிக்க பகுதிகளில் இந்த பாம்பு அதிகளவில் காணப்படுவதாக பிராணிகள் வல்லுநர்கள் கூறுகின்றனர்.
இந்த சம்பவமானது இங்கிலாந்து நாட்டில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.