குழந்தைகள் இருக்காங்கன்னு சொன்னாங்க..! ஆனால்? ஓட்டல் அறையில் 8 பேர் சடலங்கள்! தற்போது வெளியான பகீர் தகவல்!

கேரளாவிலிருந்து நேபாளத்திற்கு சுற்றுலா சென்ற 8 பேர் உயிரிழந்த சம்பவமானது மிகுந்த சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.


கேரளாவை சேர்ந்தவர்கள் பிரவீன் நாயர் மற்றும் ரஞ்சித் குமார். இவர்கள் இருவரும் கல்லூரியில் இருந்தே நண்பர்களாவர். இருவரும் தொலைவாக இரு குடும்பத்தினருடனும் செல்ல வேண்டும் என்று விரும்பினர். தங்கள் இருவருக்கும் பொதுவான மேலும் 2 நண்பர்களையும் சேர்த்துக்கொண்டு நேபாள நாட்டிற்கு செல்லலாம் என்று முடிவு செய்தனர்.

4 குடும்பத்தினரும் நேபாளத்தில் உள்ள "எவரெஸ்ட் பனோரமா" என்ற ரிசார்ட்டில்  தனித்தனி அறையெடுத்து தங்கினர். மறுநாள் காலையில் உணவுக்காக அழைப்பு விடுத்தபோது ஒரு அறையிலிருந்து பதில் வரவில்லை. நெடுநேரமாக காத்திருந்தோம் பதில் வராததால், சந்தேகமடைந்த ரிசார்ட் ஊழியர்கள் சம்பந்தப்பட்ட அறைக்கு சென்று பார்த்தனர்.

அப்போது பிரவீன் நாயர், ரஞ்சித் குமார், இருவரது மனைவிகள், 4 குழந்தைகள் என 8 பேர் மயங்கிய நிலையில் கிடந்தனர். உடனடியாக ரிசார்ட் ஊழியர்கள்  காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். காவல்துறையினர் விரைந்து வந்து அந்த உணவகத்திலிருந்து காத்மண்டுவிற்கு அவர்களுடைய உடல்களை விமானம் மூலம் எடுத்த சென்றனர். காத்மண்டுவிலுள்ள மருத்துவமனையில் அனுமதித்த போது, அவர்கள் 8 பேரும் ஏற்கனவே இறந்துவிட்டதாக கூறியுள்ளனர்.

இதுகுறித்து காவல்துறையினர் நடத்திய முதற்கட்ட விசாரணையில், அறையில் வைக்கப்பட்டிருந்த ஹீட்டர்களிலிருந்து வெளியான கார்பன் மோனாக்ஸைடு நச்சு வாயுவால் அவர்கள் அனைவரும் மயக்கமடைந்து உயிரிழந்ததாக கூறப்படுகிறது.

அந்த ரிசார்ட்டில் ஹீட்டர் பழக்கம் இல்லை என்று கூறப்படுகிறது. அன்று வெப்பநிலை 2 டிகிரி செல்சியஸ் அளவிற்கு குறைவாக இருந்ததால், குழந்தைகளை வெப்பமாக வைத்து கொள்வதற்காக இரு குடும்பத்தினரும் வற்புறுத்தி ஹீட்டர் கேட்டுள்ளதாக ரிசார்ட் ஊழியர்கள் கூறியுள்ளனர்.

இந்த சம்பவமானது காத்மாண்டுவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.