ஆங்கில உச்சரிப்பு போட்டி! சாதனை படைத்த இந்தியர்கள்! தோற்றுப் போன அமெரிக்கர்கள்!

வாஷிங்டன்: அமெரிக்காவில் நடைபெற்ற ஸ்பெல்லிங் பீ போட்டியில் இந்திய வம்சாவளியை சேர்ந்த 6 பேர் வெற்றி பெற்று அசத்தியுள்ளனர்.


பல்வேறு நாடுகளைச் சேர்ந்த சிறுவர், சிறுமிகள், அமெரிக்காவில் ஆண்டுதோறும் நடைபெறும் ஸ்பெல்லிங் பீ என்ற போட்டியில் பங்கேற்பது வழக்கம். இந்த போட்டியில், 12 முதல் 18 வயது வரையுள்ளவர்கள் பங்கேற்கலாம்.

கடினமான ஆங்கில வார்த்தைகளை சரியாக எழுத்துக்கூட்டி வேகமாக உச்சரிப்பவர்களை தேர்வு செய்து பரிசு வழங்கப்படும். இதன்படி, 2019ம்  ஆண்டுக்கான ஸ்பெல்லிங் பீ போட்டியில், 8 பேர் இறுதிச்சுற்றில் தேர்வாகினர்.

இவர்கள் 8 பேருமே இறுதிச் சுற்றில் 47 வார்த்தைகளை எவ்வித பிழையுமின்றி எழுத்துக்கூட்டி சரியாக உச்சரித்து, பார்வையாளர்களையும், நடுவர்களையும் அசத்தினர். 

வேறு வழியின்றி, 8 பேருக்குமே பரிசு வழங்குவதாக, நடுவர்கள் அறிவித்தனர். இந்த 8 பேரில், 6 பேர் இந்திய வம்சாவளியை சேர்ந்தவர்கள் ஆவர். எப்போதுமே இந்த ஸ்பெல்லிங் பீ போட்டியில் இந்தியர்கள் மட்டுமே ஆதிக்கம் செலுத்துவது குறிப்பிடத்தக்கது.