தமிழகத்தில் இன்று மேலும் 75 பேருக்கு கொரோனா..! பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 309ஆக உயர்ந்தது!

தமிழகத்தில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை இன்று ஒரே நாளில் 75 உயர்ந்து 309ஆக அதிகரித்துள்ளது.


சென்னையில் சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஸ் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர் கூறியதாவது, தமிழகத்தில் மேலும் 75 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இவர்களில் 74 பேர் டெல்லி தப்லிக் ஜமாத் மாநாட்டிற்கு சென்று வந்தவர்கள். எஞ்சிய ஒருவர் ஏற்கனவே நோய் தொற்று கொண்டவருடன் தொடர்பில் இருந்தவர்.

இதுவரை தமிழகத்தில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 309ஆக உயர்ந்துள்ளது. இவர்களில் 263 பேர் டெல்லி தப்லிக் ஜமாத் மாநாட்டிற்கு சென்று வந்தவர்கள். டெல்லி சென்று தமிழகம் வந்தவர்கள் அனைவருக்கும் கொரோனா பரிசோதனை முடிந்துவிட்டது. ஒரு சிலருக்கு மட்டும் முடிவுகள் வர வேண்டியுள்ளது.

இவ்வாறு பீலா ராஜேஸ் கூறியுள்ளார்.