மருத்துவமனையில் எறும்புகளுக்கு உணவாக்கப்பட்ட ராணு வீரர் உடல்! நேரில் பார்த்து அதிர்ந்த மகள்! பதற வைக்கும் சம்பவம்!

அமெரிக்க விமானப்படை வீரரை 100-க்கும் மேற்பட்ட எறும்புகளுக்கு தீணியாக்க செய்தியானது அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.


வியட்நாமில் அமெரிக்கா நாடு போர் தொடுத்தபோது ஜேயல் மார்ரபிள் என்பவர் விமானப்படை வீரராக பொறுப்பிலிருந்தார். இவருடைய வயது 74. இவர் விமானப் படையிலிருந்து வயது மூப்பின் காரணமாக விடைபெற்றார்.

ஜார்ஜியா மாகாணத்தில் டெகாடூர் என்ற நகரம் அமைந்துள்ளது. இந்த நகரத்தில் ஈகிள் நெக்ஸ்ட் என்ற சமூக வாழ்வு மையம் அமைந்துள்ளது. உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்ட ஜார்ஜ் இங்கு அனுமதிக்கப்பட்டிருந்தார். மேல் சிகிச்சைக்காக அவரை அதே பகுதியில் உள்ள ‌வி.ஏ. மருத்துவமனைக்கு இடம்மாற்றினர்.

2 நாட்கள் கழித்து ஜார்ஜை காண்பதற்கு அவருடைய மகள் மருத்துவமனைக்கு வந்திருந்தார். அப்போது அவருடைய உடல் முழுவதும் 100-க்குள் மேற்பட்ட இடங்களில் எறும்புகள் கடிக்கப்பட்டிருந்தன. மேலும் அந்த அறையில் இருந்த மெத்தை, மேற்கூரை, படுக்கை, அது அனைத்திலும் எறும்புகள் சூழ்ந்திருந்தன. இதனை கண்ட அவர் பெரிதும் அதிர்ச்சி அடைந்தார்.

நாட்டுக்காக பெரிதும் போராடிய வீரருக்கு இப்படி ஒரு நிலையை ஏற்படுத்திய மருத்துவமனை மீது வழக்குப்பதிவு செய்துள்ளார். சம்பவம் அறிந்த மருத்துவமனை நிர்வாகம், "நிர்வாக மேலாளர் கட்டாய விடுப்பில் சென்றிருப்பதால் தவறுக்காக மன்னிப்பு கேட்கிறோம். அவர் வந்தவுடன் நடவடிக்கைகள் எடுக்கப்படும்" என்று கூறப்பட்டது.

இந்த சம்பவத்தை அறிந்த முன்னாள் ராணுவ வீரர்கள் கடுமையான கண்டனங்களை தெரிவித்துள்ளனர்.