சென்னை: 10 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த 73 வயது நபர் கைது செய்யப்பட்டார்.
73 வயது காமக் கொடூர கிழவனிடம் சிக்கிய 10 வயது சிறுமி..! கண்ணீர் விட்டு கதறியபடியே வீட்டிற்கு திரும்பிய பரிதாபம்!

சமீபகாலமாகவே, இந்தியா முழுக்க பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்ற செயல்கள் அதிகரித்து வருகின்றன. இதன் சமீபத்திய வரவாக, சென்னையில் ஒரு சம்பவம் நிகழ்ந்துள்ளது. அம்பத்தூரில் உள்ள 10வது மெயின்ரோடு பகுதிக்கு அருகில் வசித்து வரும் தம்பதியருக்கு, 10 வயதில் ஒரு மகள் உள்ளார்.
அந்த சிறுமி, அருகாமையில் உள்ள பள்ளியில் படிப்பதோடு, அதே பகுதியில் உள்ள டியூஷன் ஒன்றில் மாலை நேரம் படித்து வருகிறார். இந்நிலையில், கடந்த 30ம் தேதியன்று, சிறுமி டியூசனுக்குச் சென்றுவிட்டு வீடு திரும்பியபோது, அதே பகுதியில் வசிக்கும் 73 வயதான சுந்தரமூர்த்தி என்ற முதியவர் சிறுமியை வழிமறித்துள்ளார்.
சிறுமியிடம் என்ன படிக்கிறாய், என்ன வயது,என்றெல்லாம் பேசியபடி திடீரென பாலியல் சில்மிஷம் செய்திருக்கிறார். உடனே அங்கிருந்து
தப்பியோடி வந்த சிறுமி, பெற்றோரிடம் நடந்ததைச் சொல்ல, அவர்கள் உடனடியாக போலீசில் புகார் செய்தனர். சம்பந்தப்பட்ட முதியவரை விசாரித்த
போலீசார், அவர் குற்றம் செய்தது உறுதியானதை தொடர்ந்து, போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிந்து, 73 வயது சில்மிஷ ஆசாமியை