26வது மாடியில் இருந்து குதித்த 73 வயது பெண்! அதிர வைக்கும் காரணம்

டெல்லியில் கணவர் 2 மாதங்களுக்கு முன் இறந்ததால் தனிமை வாட்டியெடுக்க மன உளைச்சலில் இருந்த 73 வயதுப் பெண் 26-வது மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்துகொண்டார்.


திங்கட்கிழமை காலை பரேல் என்ற இடத்தில் உள்ள பரேல் ஹை ரைஸ் என்ற அடுக்கு மாடிக் குடியிருப்புக் கட்டிடத்தின் 26-வது மாடியில் இருந்து ஒரு மூதாட்டி குதித்து தற்கொலை செய்துகொண்டதாக கிடைத்த தகவலின் பேரில் ஆர்.கே. மார்க் காவல்நிலைய போலீசார் அங்குசென்ற போது ரத்த வெள்ளத்தில் ஒரு மூதாட்டி தரையில் கிடந்தார்.

உடனடியாக அவரை மருத்துவமனைக் கொண்டு சென்ற போது அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இதையடுத்து போலீசார் விசாரணையைத் தொடங்கினர். கால் தவறி விழுந்தாரா? தற்கொலையா? எவரேனும் தள்ளிவிட்டுக் கொலை செய்தனரா என பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை மேற்கொள்ள வேண்டியிருந்தது.

விசாரணையில் உயிரிழந்தவரின் பெயர் சவீதா என்று தெரியவந்தது. அவரது கணவர் லக்‌ஷ்மண் சர்மா கடந்த ஆண்டு உயிரிழந்த நிலையில் தனிமையில் வாடிய அவர், மன உளைச்சலில் இருந்தது விசாரணையில் தெரிய வந்தது.

இந்நிலையில்  73 வயது வரை உடன் வசித்த வாழ்க்கைத் துணையின் பிரிவும், உளைச்சலும், மன அழுத்தமும் தந்த வேதனையை விட உயிர் வேதனை பெரிது என சவீதாவுக்குத் தோன்றவில்லை போலிருக்கிறது.

உயிர் வாழ்கையை முடித்துக் கொள்ள தீர்க்கமாக முடிவு செய்த பின் கட்டிடத்தின் உயரமும் அவருக்கு வெகு அற்பமாகத் தெரிந்தது. தனது குடியிருப்பின் பால்கனிக்குச் சென்ற அவர் ஏதோ நாற்காலியில் இருந்து குதிப்பது போலக் கீழே குதித்தார்.

அவரது உடல் காற்றில் பயணித்து தரையைத் தொட்டபோது ரத்த வெள்ளத்துக்கு மத்தியில் சவீதாவின் உயிர்ப் பயணம் தொடங்கியிருந்தது. அந்த மூதாட்டியின் மகள் பரேல் பகுதியிலேயே வேறொரு குடியிருப்பில் இருந்த போதிலும் மூதாட்டிக்கு ஆதரவளிக்கவோ, அவரது மரணத்தை தடுத்திருக்கவோ மனம் இல்லாமல் போனது. 

இந்நிலையில் சொத்து உள்ளிட்ட காரணங்களுக்காக குடும்பத்தினரே கூட அவரைக்கொன்றிருக்கக் கூடும் என்ற சந்தேகமும் எழுந்ததை அடுத்து அந்தக் கோணத்திலும் போலீசார் விசாரணை மேற்கொண்டனர். ஆனால் அதற்கான ஆதாரங்கள் ஏதும் கிடைக்காத நிலையில் போலீசார் இதனை விபத்து வழக்காக பதிவு செய்துள்ளனர்.