15 வயது சிறுமியை கர்ப்பமாக்கிய 70 வயது கருப்பையா! அதிர்ச்சியில் உறைந்த உறவினர்கள்!

விருதுநகரில் ஒன்பதாம் வகுப்பு படிக்கும் சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து கர்ப்பமாக்கிய 70 வயது முதியவர் கைது செய்யப்பட்டுள்ளார்.


விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை அருகே உள்ள தர்மம் கிராமத்தில் வசித்து வருபவர் 70 வயது நிரம்பிய கருப்பையா என்ற முதியவர். அதே பகுதியில் தாய், தந்தை இல்லாததால் தனது அத்தை மாமா வீட்டில் தங்கி ஒன்பதாம் வகுப்பு படிக்கும் மாணவியுடன் இவர் நெருங்கி பழகி வந்தார்.

தாத்தா வயது என்பதால் யாரும் இதனை பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை. ஒன்பதாம் வகுப்பு சிறுமிக்கு தேவையான பொருட்களை வாங்கிக் கொடுத்த அந்த முதியவர் பாலியல் ரீதியில் அவரை அணுகியுள்ளார். துவக்கத்தில் அந்த சிறுமிக்கு இது குறித்த விவரம் தெரியவில்லை.

ஒரு கட்டத்தில் முதியவர் கருப்பையா சிறுமியுடன் பாலியல் உறவு கொண்டுள்ளார். இந்நிலையில், ஒருநாள் மாணவி மயங்கினார். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட போது பரிசோதித்த டாக்டர்கள் அவர் கர்ப்பம் அடைந்துள்ளார் என கூறி அதிர வைத்துள்ளனர்.

இது குறித்து சிறுமியின் அத்தை விசாரித்ததில் கருப்பையா இதற்கு காரணம் என தெரியவந்துள்ளது. இதனால், அருகில் உள்ள அருப்புக்கோட்டை மகளிர் காவல் நிலையத்திற்குச் சென்று கருப்பையா மீது மாணவியின் அத்தை புகார் தெரிவித்துள்ளார். இந்த புகாரின் அடிப்படையில் போக்சே சட்டத்தின் கீழ் கருப்பையாவை கைது செய்தது காவல்துறை.