39 மனைவிகள்! 94 குழந்தைகள்! ஒரே வீடு! 70 வயதில் அனைவரையும் கட்டி ஆளும் ஒரே ஆண்மகன்! யார், எப்படி தெரியுமா?

மிசோரம்: 70 வயது முதியவருக்கு 39 மனைவிகள் உள்ள விசயம், பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


மிசோரம் மாநிலத்தைச் சேர்ந்தவர் ஜியோனா சானா. 70 வயதான இந்த முதியவர், தனது 39 மனைவிகளுடன்  ஒரு பெரிய வீட்டில் ராஜ வாழ்க்கை வாழ்ந்து வருகிறார். அது மட்டுமல்ல, அவருக்கு 94 குழந்தைகள் பிறந்தனர். அவர்களில் சிலருக்கு திருமணம் செய்து வைத்த நிலையில், தற்போது குடும்பத்தில் 14 மருமகள்கள் மற்றும் 33 பேரக்குழந்தைகளும் புதியதாக சேர்ந்துள்ளனர்.

இதனால், ஜியோனாவின் குடும்பம் சுமார் 150க்கும் மேலான நபர்களுடன் சிறப்பாக உள்ளது. சுமார் 100 அறைகள் கொண்ட பெரிய பங்களாவை கட்டி, அதில் ஒவ்வொருவருக்கும் ஒரு அறையை ஒதுக்கியுள்ளாராம். இது மட்டுமா, 40வது திருமணம் செய்துகொள்ளும் ஆசையில் ஜியோனா, புதியதாக பெண் பார்க்க தொடங்கியுள்ளாராம்.

ஒரு மனைவிக்கே வழியில்லாமல் அல்லாடும் சிங்கிள்ஸ் வாழும் நாட்டில் 39 மனைவிகளுடன் ஆடம்பரமாக வாழும் இந்த நபரை பலரும் வயிற்றெரிச்சலுடன் பார்க்கிறார்கள் என்பதையும் இங்கே குறிப்பிட்டாக வேண்டும்...