70 வயது தாத்தாவுக்கு 55 வயது பாட்டியுடன் கள்ளக்காதல்! காவல் நிலையத்தில் புகார் கொடுக்கவந்த 65 வயசு! சேலம் லொள்ளு!

சேலம் டவுன் அனைத்து மகளீர் காவல் நிலையத்துக்கு நேறைய தினம் ஒரு மறக்க முடியத நாளாகிவிட்டது.


கள்ரம்பட்டியைச் சேர்ந்த 65 வயது மூதாட்டி மகளிர் காவல் நிலையத்தில் ஒரு புகார் கொடுத்தார்,தன்னை விட ஐந்து வயது மூத்த தன் கணவர் அவருடைய 55 வயது காதலியுடன் தனியே வாடகைக்கு வீடெடுத்து வசிப்பதாகவும்,போலீசார் அவரை அழைத்து அறிவுரை சொல்லித் தன்னோடு அனுப்பி வைக்க வேண்டும் என்று அந்த புகார் மனுவில் கோரிக்கை வைத்திருந்தார்.

போலீசார் அந்த முதியவரையும் , அவர் காதலியையும் ஸ்டேஷனுக்கு அழைத்த் வந்தனர் கணவனுடன் வந்த பெண்ணைப் பார்த்த மூதாட்டி ' எங்க கல்யாண நாளுக்கெல்லாம் உனக்கு புடவை எடுத்துக் குடுத்தனே,என் வாழ்க்கையில் கை வைக்கலாமா' என்று உணர்ச்சிப் பிழம்பாக கேட்டாராம்.

போலீசாரின் எந்த கேள்விக்குமே முதியவரும் அவரது காதலியும் பதிலளிக்கவே இல்லை. அந்த முதியவர் கடைசியாக கூறும்போது 'எனக்கு வாழ்க்கையில் எந்த மகிழ்ச்சியும் இல்லை,அதனால்தான் என் அலுவலகத்தில் வேலை பார்த்த இந்தப் பெண்ணுடன் பழக்கம் ஏற்பட்டது.நாங்கள் 10 ஆண்டுகளாக மகிழ்ச்சியாக இருக்கிறோம்.என்னை இந்தப் பெண்ணிடம் இருந்து பிரித்துவிடாதீர்கள்' என்று கெஞ்சி இருக்கிறார்.

இதைக் கேட்ட மகளீர் காவல் நிலையப் போலீசார் ' நீங்கள் ஜெயிலுக்குத்தான் போக வேண்டி இருக்கும்' என்று மிரட்டி இருக்கிறார்கள். கடைசியாக முதல்வர் ' உங்கள் சட்டத்துக்காக நான் வீட்டுக்கு போகிறேன்.ஆனால்,நான் வாழப் போவது எனது மனம் கவர்ந்த இவளோடுதான்.என்று சொல்லி விட்டு போலீசார் அதிர்ச்சியுடன் பார்த்துக் கொண்டு இருக்க அந்த 70 வயது காதலன்,தன் காதலியோடு கிளம்பிப் போய்விட்டாராம்.